தென்கிழக்குப் பல்கலைக்கழக நில அலங்காரப் பிரிவின் மேற்பார்வையாளர் ஆதம்பாவா சம்ஷாருக்கு இனிய பிரியாவிடை



லங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நில அலங்காரப் பிரிவின் மேற்பார்வையாளராக (Curator) கடந்த 1997 மே 15 ஆம் திகதி முதல் தொடர்ந்து 28 ஆண்டுகள் பணியாற்றி, பல்கலைக்கழக வளாகத்தை அழகுபடுத்துவதில் முக்கிய பங்கு வகித்த ஆதம்பாவா சம்ஷார், 2025 நவம்பர் 27 ஆம் திகதியுடன் ஓய்வுபெறுகிறார்.

அவரது பணி நிறைவை முன்னிட்டு, நில அலங்காரப் பிரிவினரின் ஏற்பாட்டில் பிரியாவிடை நிகழ்வு, பல்கலைக்கழக ஊழியர் மேம்பாட்டு நிலைய கேட்போர் கூடத்தில் சிறப்பாக நடைபெற்றது. எம்.ஏ. யாசீர் றிfப்கியின் வழிகாட்டலில் இடம்பெற்ற இன்நிகழ்விற்கு ஏ.என். நௌஷாட் தலைமை தாங்கினார்.

கௌரவ அதிதியாக பல்கலைக்கழக வேலைகள் மற்றும் பராமரிப்பு பிரிவு (Works and Maintenance Division) தலைவர் பொறியியலாளர் எம்.எஸ்.எம். பஸில் கலந்து கொண்டு, ஓய்வுபெறும் அதிகாரியை வாழ்த்தி உரையாற்றினார். நிகழ்வின்போது, நில அலங்காரப் பிரிவு உறுப்பினர்களால் நினைவுப்பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

ஆதம்பாவா சம்ஷார் அவர்கள் B.Sc (Agri) (EUSL), MSc in Entomology & Ecology (UPDN), PGD in Landscape Design (UMRT) உள்ளிட்ட உயர்கல்வித் தகுதிகளை பெற்றவர். பணிக்காலத்தில் பல பசுமை மற்றும் அழகுபடுத்தும் திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுத்து, பல்கலைக்கழக வளாகத்தை இயற்கை அழகுடன் பராமரிக்கும் பணியில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டார். அவரது பணித்திறன், ஒழுக்கம் மற்றும் உழைப்புத் தன்மை அனைவராலும் பாராட்டப்பட்டது.

நிகழ்வு நிறைவில் நன்றியுரை வழங்கப்பட்டு, இனிய நினைவுகளுடன் பிரியாவிடை கூறப்பட்டது.















 











இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :