"வொன்டர்ஸ் (WONDERS) இளைஞர் கழகத்தின்" புதிய நிர்வாக பதவிப்பிரமாண நிகழ்வு!



ருதமுனை மஸ்ஜிதுல் இஸ்லாம் நகர் மற்றும் அதனோடு இணைந்த ஸகாத் வீட்டுத் திட்ட பிரதேச இளைஞர்களை உள்ளடக்கி ஆரம்பிக்கப்பட்ட "வொன்டர்ஸ் (WONDERS) இளைஞர் கழகத்தின்" புதிய நிர்வாக பதவிப்பிரமாண நிகழ்வு கடந்த (09.08.2025) ஸகாத் வீட்டுத் திட்ட பிரதேசத்தில் அமைந்துள்ள பிர்றுள்வாலிதைன் (Birrulwaalidhain) பள்ளிவாசலில் அதன் தலைவர் தொழிலதிபர் அல்-ஹாஜ் எம்ஐ. உபைதுர்ரஹ்மான் தலைமையில் இடம்பெற்றது.

விஷேட அதிதியாக கலந்துகொண்ட கல்முனைப் பிரதேச இளைஞர் சேவை அதிகாரி ஏஎல். முகம்மது அஸீம் அவர்களின் முன்னிலையில் கௌரவ அதிதிகளால் புதிய நிறைவேற்று குழுவிற்கு தெரிவுசெய்யப்பட்ட 09 இளைஞர்களுக்கான நியமனக்கடிதங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

கழகத்தின் தலைவராக ஏஏ. அபுலைஸ், செயலாளராக ஏஎஸ். ஆத்திப்கான், பொருளாளராக எம்எம். முஆப், அமைப்பாளராக எம்வைஏ. இமாத், உபதலைவராக எம்ஐ. ஹினாஸ் அஹமத், உதவிச் செயலாளராக ஏஎஸ். ஸஹீல், விளையாட்டு செயலாளராக ரிஎஸ். ஜிஹான், கல்வி செயலாளராக எம்ஜேஎம். ஜஹாஸ் மற்றும் கணக்குப் பரிசோதகராக ஆத்திப் இஸ்ஹாக் ஆகியோர் நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர்.



கழகத்தின் கல்விப் பிரிவு செயலாளர் எம்ஜேஎம். ஜஹாஸ் அவர்களை சப்ரகமுவ பல்கலைக்கழகத்திற்கு வழியனுப்பி வைக்கும் முகமாக மஹல்லாவாசிகளால் அன்பளிப்பு வழங்கி பாராட்டப்பட்டார். ஸகாத் வீட்டுத் திட்டத்தில் வசிக்கும் மாணவி ஷாரா செய்னுலாப்தீன் கடந்த வருடம் (2024) 05 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றி வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்றுக்கொண்டமைக்காக அன்பளிப்பு வழங்கி பாராட்டப்பட்டார். இவ்வீட்டுத்திட்ட பிரதேசத்திலிருந்து இம்முறை 03 மாணவர்கள் இப் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர். இவர்களை உட்சாகப்படுத்தும்முகமாக மஹல்லாவாசிகள் சிலரால் அன்பளிப்புச் செய்யப்பட்ட பரீட்சை எழுதுவதற்கான உபகரணங்கள் ஷாரா செய்னுலாப்தீன் அவர்களால் வழங்கிவைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் அஷ்-ஷெய்க் அல்-ஹாபிழ் ஏசிஎம். ஸஜீத் இஸ்லாஹி சிறப்புச் சொற்பொழிவு ஆற்றினார். பள்ளிவாசல் தலைவர். அல்-ஹாஜ் எம்ஐ. உபைதுர்ரஹ்மான், மருதமுனை ஸகாத் நிதிய பொருளாளர் ஏஆர். றஹ்மதுள்ளாஹ் ஹாஜியார், இளைஞர் சேவை அதிகாரி ஏஎல். முகம்மது அஸீம் ஆகியோரும் இளைஞர்களின் சமூகப்பொறுப்பு சம்பந்தமாக பல்வேறு கோணங்களில் உரையாற்றினர். இந்நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக மருதமுனை ஹிளிஷ்டன்ஸ் (Glistens) இளைஞர் கழக இணைப்பாளர் மிஸாஜ் சுபைர், பெரிய நீலாவணை பாக்கியா (Bakkiya) இளைஞர் கழக இணைப்பாளர் றாசி முஸாதிக் மற்றும் மஹல்லாவாசிகள், ஊர் பிரமுகர்கள், இளைஞர்கள், மாணவர்கள், மகளிர்கள் என பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இப்பிரதேசம் கடந்த வருட இறுதியில் ஏற்பட்ட பாரிய வெள்ள அனர்த்தத்தினால் முற்றாக பாதிக்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வுகளுக்கான அனுசரணையை மஹல்லாவாசிகள் மற்றும் ஊர் பிரமுகர்கள் வழங்கியிருந்தனர். மருதமுனை செஸ்டோ சிறிலங்கா தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் "மஸ்ஜித் மைய இளைஞர் சமூகம்" எனும் வேலைத்திட்டத்தின் கீழ் அதன் தலைவர் நாபி எம் முஸ்னீ இந்நிகழ்வுகளை நெறிப்படித்தினார். இத்திட்டத்தின் கீழ் 01வது வேலைத்திட்டம் மருதமுனை மழ்ஹருள் மக்பூலியா ஜும்ஆ பள்ளிவாசலில் அண்மையில் இடம்பெற்றமை இங்கு நினைவுகூரத்தக்கது.











இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :