தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தொழில்வாய்ப்பு வழிகாட்டல் பிரிவின் பணிப்பாளர் கலாநிதி எம்.பி.எம். இர்ஷாத் அவர்களின் வழிகாட்டலில் இடம்பெற்ற இந்நிகழ்வின்போது சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எவ்.எச்.ஏ. சிப்லி, அட்டளைச்சேனை பிரதேச செயலக பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் BAUMM. ஷாபி மீர்சா பல்கலைக்கழக தொழில் வழிகாட்டி ஆலோசகர்களான எல்.ரீ.எம். இயாஸ், ஏ. பாறுக் ஆகியோரும் மாணவர்களும் பங்கு கொண்டிருந்தனர்.
நிகழ்வின் பிரதான வளவாளராக நீதி அமைச்சின் மத்தியஸ்த சபைகளின் ஆணைக்குழுவின் முன்னிலை மத்தியஸ்த பயிற்சியாளர் (Advanced Mediation Trainer) எம்.ஐ.எம். ஆஷாத் கலந்துகொண்டு உரையாற்றினார்.
"மாற்று தீர்வு முறையாக மாணவர் நடுவர் முறை: தேவைக்கேற்ப பேச்சுவார்த்தை (IBN) மற்றும் செயலில் செவிசாய்தல்" எனும் தொனிப்பொருளிலான செயலமர்வு மாணவர்களின் கருத்துப் பரிமாற்ற திறனையும், சமரசப்பூர்வமாக மோதல்களை தீர்க்கும் திறனையும் மேம்படுத்தும் நோக்கத்தில்,
சமரச அடிப்படையிலான தீர்வுகளை தேடுவதற்கான நடைமுறைத் திறன்களை, எதிர்மறையான சூழ்நிலைகளிலும், அமைதியான கலந்துரையாடல்களை முன்னெடுக்கக்கூடிய மனப்பாங்கையும், தீர்வுக்கு வழிவகுக்கும் செயலில் செவிசாய்தல் (Active Listening) திறனையும் IBN (Interest-Based Negotiation) எனப்படும் தேவையிலான பேச்சுவார்த்தை அணுகுமுறையை மற்றும் அதன் நடைமுறைகளை விரிவாகக் கற்றுக்கொள்ள வாய்ப்புக்களை வழங்கும் விதத்தில் அமைந்திருந்தது.
இந்த நிகழ்வானது மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் சமூகத்தில் ஒரு செயல் திறனுள்ள சமரசதிறன் வாய்ந்த தலைமைப்பண்புகளை வளர்க்கும் நோக்கத்துடன் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

0 comments :
Post a Comment