இலங்கை வெளிநாட்டு பல்கலைக்கழக வேலையற்ற பட்டதாரிகள் அமைப்பினர் தமக்கான நியமனத்தை வழங்கக் கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று (8) இன்று ஐனாதிபதி செயலக முன்னால் உள்ள திடலில் நடை பெற்றது.
இவ்வார்ப்பாட்டத்தில் திருகோணமலை, மட்டக்களப்பு,அம்பாறை, அனுராதபுரம்,புத்தளம் மற்றும் ஏனைய மாவட்டங்களைச் பட்டதாரிகள் இதில் கலந்துகொண்டனர்.
உள்வாரி பட்டதாரிகளுக்கு வழங்கப் பட்டது போல் வெளிநாட்டுப் பட்டதாரிகளுக்கும் தமக்கான நியமனத்தை காலம் தாழ்த்தாது உடன் வழங்குமாறு
பட்டதாரிகள் கோரிக்கை விடுத்தனர்.
இவ்வார்ப்பாட்டத்திக்கு திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் பட்டதாரிகளின் பிரச்சினைகளை கேட்டறிந்து கொண்டதுடன அதிமேதகு ஐனாதிபதி ,பிரதமர் மற்றும் பொது நிர்வாக மற்றும் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஜனக்க பண்டார தென்னக்கோன் ஆகியோரிடத்தில் பேசி சாதகமான பதிலை தருவதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக் குறிப்பிட்டார்.
பட்டதாரிகள் அமைப்பிலிருந்து மூவர் ஜனாதிபதி் செயலகத்திக்கு அழைத்து செல்லப் பட்டு பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment