தகவல் பெறும் உரிமைச் சட்டம்; இனி ஆன்லைனில்



கவல் பெறும் உரிமைச் சட்டம்; இனி ஆன்லைனில் - பரங்கிப்பேட்டை கலீல் பாகவீயின் கோரிக்கையை தமிழக அரசு ஏற்றது!

மத்திய, மாநில அரசு அலுவலகங்களின் வெளிப்படைத்தன்மை, பொறுப்புடைமை, ஊழலை கட்டுப்படுத்துதல் ஆகிய நோக்கங்களுடன் கடந்த 2005ம் ஆண்டு மத்திய அரசால் தகவல் அறியும் உரிமை சட்டம் (ஆர்டிஐ) கொண்டுவரப்பட்டது. நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ மனு அனுப்பும் நடைமுறை இருந்து வருகிறது.

‘ஆன்லைன்’ மூலம் சமர்ப்பிக்கும் முறையை அறிமுகம் செய்த மத்திய அரசு, கடந்த 2013ம் ஆண்டு 2,600 துறைகளுக்கு இந்த வசதியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, டெல்லி போன்ற மாநிலங்களிலும் விபரங்களை ஆன்லைனில் பெறும் வசதி மாநில அரசால் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. 

ஆனால், தமிழகத்தில் ஆன்லைன் நடைமுறை இதுவரை அமல்படுத்தப்படவில்லை.

முப்பது நாட்களுக்குள் தகவல் கிடைக்காவிடில் மேல்முறையீடு செய்து, அவ்வாறு மேல்முறையீடு அளிக்கும்போது பதில் திருப்தி அளிக்கவில்லையெனில் தகவல் ஆணையத்திற்கு இரண்டாவது மேல்முறையீடு செய்யலாம். இதில் தாமதம் ஏற்படுவதை தடுக்க இரண்டாவது மேல்முறையீட்டிற்கு ஆன்லைன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

ஆனால், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு செய்ய ஆன்லைன் வசதி ஏற்படுத்தப்படாதது சமூக ஆர்வலர்களிடையே கவலையை ஏற்படுத்தியது.

சட்டம் கொண்டுவரப்பட்டு பதினைந்து ஆண்டுகளாகியும் இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்பதால் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் பொதுச் செயலாளர், சமூக செயற்பாட்டாளர் பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ, தமிழக முதலமைச்சர் தனிப்பிரிவுக்கும், தமிழ்நாடு தகவல் ஆணையருக்கும் கோரிக்கைகளை அனுப்பியிருந்தார்.

இவரின் கோரிக்கை ஏற்கப்பட்டு தற்போது பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையில் மட்டும் இது நடைமுறைப்படுத்தப்படும் என்றும், படிப்படியாக இந்த ஆன்லைன் செயல்முறை அனைத்து துறைகளிலும் விரிவாக்க செய்யப்படும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து மக்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் நற்பணிகளில் இதுவும் வரலாற்றில் பதியப்படும் இன்ஷா அல்லாஹ்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :