இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம் நடாத்தும் அம்பாறை மாவட்ட பிரதான சிவராத்திரி நிகழ்வு (11) காரைதீவு ஆதிசிவன் ஆலயத்தில் காலை முதல் நடைபெற்றது.
புத்தசாசன சமயவிவகாரங்களுக்கான அமைச்சரும் பிரதமருமான மஹிந்தராபக்ச நாடளாவியரீதியில் 11ஆலயங்களுக்கு தலா 50ஆயிரம் ருபா வீதம் சிவராத்திரிக்காக நிதியொதுக்கீடுசெய்திருந்தார். அந்தவகையில் அம்பாறை மாவட்டத்திற்கான 50ஆயிரம்ருபா நிதி மேற்படி ஆதிசிவனாலயத்திற்கு ஒதுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அந்த அடிப்படையில் நேற்று அங்கு காரைதீவு பிரதேசசெயாளர் சிவ.ஜெகராஜன் மங்கலவிளக்கேற்றி அறnறிமாணவரின் நிறைகும்பம் வைத்தல் சரம் கட்டுதல் பூமாலை கட்டுதல் கோலம் போடுதல் தோறணம் கட்டுதல் போன்ற போட்டிநிகழ்வுகளை ஆரம்பித்துவைத்தார்.
ஆதிசிவன் ஆலயத்திலுள்ள சிவலிங்கத்திற்கு பக்தர்கள் பால் மற்றும் நீர் சொரிந்து வழிபட்டனர்.
மாவட்ட இந்துகலாசார உத்தியோகத்தர் கு.ஜெயராஜி ஒழுங்குசெய்த இந்நிகழ்வில் பிரதேசசெயலாளர் சிவ.ஜெகராஜன் ஆலயதலைவர்களான கே.செல்லத்துரை இ.குணசிங்கம் இரா.திருநாவுக்கரசு சி.நந்தேஸ்வரன் இந்துசமயவிருத்திச்சங்கமுன்னாள்தலைவர் வி.ரி.சகாதேவராஜா உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர்.
மாலையில் நான்குயாமப்பூஜைகள் இடம்பெற ஏற்பாடாகியிருந்தது.
0 comments :
Post a Comment