உலகிலுள்ள அனைத்து மனிதர்களினதும் நோக்கமாக இருப்பது தங்களின் வாழ்நாள் முழுவதும் மன மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்பதேயாகும். அதற்கமைவாக, 'தேசிய மகிழ்ச்சி தினம்' பிரகடனப்படுத்தப்பட்டு ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 20 ஆம் திகதி தேசிய ரீதியில் கொண்டாடப்பட்டு வருகின்றன.
இதனை கொண்டாடும் முகமாக கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய மகிழ்ச்சி தினம் இம்மாதம் 20 ஆம் திகதி காலை 9.00 மணிக்கு திருகோணமலை தள ஆயுர்வேத வைத்தியசாலை கூட்ட மண்டத்தில் கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்கள ஆணையாளர் வைத்திய கலாநிதி திருமதி ஆர்.ஸ்ரீதர் தலைமையில் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுநர் அனுராத யஹம்பத் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளார். மேலும் கௌரவ அதிதிகளாக மாகாண பிரதம செயலாளர் துஷித பீ.வணிகசிங்க, ஆளுநரின் பிரத்தியேக செயலாளர் எல்.பி.மதநாயக்க, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார் உள்ளிட்ட உயர் அதிகாரிகள், கிழக்கு மாகாணத்திலுள்ள ஆயுர்வேத வைத்தியர்கள், உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளதாக கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள ஆணையாளர் வைத்திய கலாநிதி திருமதி. ஆர்.ஸ்ரீதர் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment