சன் பிரைட் பிரீமியர் லீக் கிரிக்கட் சுற்றுப்போட்டி : சம்பியனானது வாரியர்ஸ் அணி !



எம்.என்.எம்.அப்ராஸ்-
ல்முனை -சன் பிரைட் கழகத்தின் பிரீமியர் லீக் கிரிக்கட் சுற்றுப் போட்டியில் சம்பியனானக வாரியர்ஸ் அணி வெற்றி பெற்று கிண்ணத்தை தனதாக்கிகொண்டது.
குறித்த சுற்று போட்டியில் இலவன் ஸ்பார்ட்ன்ஸ்(11 SAPARTANS), வாரியர்ஸ் (WARRIORS), ஹார்ட் ஹைட்ரஸ்(HARD HITTERS) ஆகியமூன்று அணிகள் மோதின.

இவ் போட்டிகள் யாவும் கல்முனை சாந்தான்கேணி மைதானத்தில் நடைபெற்றது.
அணிக்கு 7 ஒவர்கள் கொண்ட மென்பந்து சுற்று போட்டியில் ஒரு அணிக்கு இரண்டு போட்டிகள் கொண்ட சுற்றுத்தொடரில் வாரியஸ் மற்றும்
ஹார்ட் ஹைட்ரஸ் அணிகள் இறுதி போட்டிக்கு தெரிவு செய்யபட்டது.
இறுதி போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஹார்ட் ஹைட்ரஸ் அணி 7 ஒவர் முடிவில் 5 விக்கட்டுக்களை இழந்து 50 ஒட்டங்களை பெற்றது.

பதிலுக்கு துடுப்பாடிய ஆடிய வாரியஸ் அணி 7 ஒவர் முடிவில் 4 விக்கட்டுக்களை இழந்து 53 ஒட்டங்களை பெற்று போட்டியில் சம்பியனாக வெற்றி வாகை சூடியது.
போட்டியில் ஆட்டநாயகனாக வாரியஸ் அணி வீரர் எம்.அஷ்பாக் தெரிவானார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :