தற்போது அடையாளம் காணப்படும் கொரோனா தொற்றாளர்களுக்கு காணப்படும் அறிகுறிகளை பார்க்கும் போது புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருகின்றதா எனும் சந்தேகம் ஏற்படுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அத்துடன், புதிய வகை கொரோனா வைரஸ் தொற்றை அடையாளம் காண்பதற்கான வசதிகள் நாட்டில் பற்றாக்குறையாக காணப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குருணாகலையில் திருமண வைபத்தில் பங்கேற்ற 250 பேரில் 136 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமையானது, தொற்று வேகமாகப் பரவுவதை எடுத்துக் காட்டுவதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே, நாட்டில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து ஆராய பொறிமுறையொன்று உருவாக்கப்பட வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
0 comments :
Post a Comment