பெரும்பாலான மத அமைப்புக்கள் மற்றும் மத்ரஸாக்களைத் தடை செய்யவுள்ளோம் - அமைச்சர் சரத் வீரசேகர



மினுவாங்கொடை நிருபர்-
பெருமளவிலான மத அமைப்புக்கள் மற்றும் மத்ரஸாப் பாடசலைகளை, எதிர்வரும் நாட்களில் தாம் தடை செய்ய இருப்பதாக, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி நிகழ்சி ஒன்றில் கருத்து வெளியிடும்போதே, அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவிக்கும்போது,
நாட்டில் பிறக்கும் அனைத்து குழந்தைகளும் 18 வயது வரை, அரசு அனுமதித்துள்ள கல்வித் திட்டத்தினையே கற்க வேண்டும்.
இது அல்லாமல், ஒவ்வொருவருக்கும் நினைத்தவாறு பாடசாலைகளில் விருப்பமான பாடங்களைக் கற்கவோ அல்லது நினைத்த மாத்திரத்தில் பாடசாலைகளைத் திறந்து அவர்களுக்கு விருப்பமான பாடங்களைக் கற்பித்துக் கொடுக்கவோ எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது.
எனவே, இது தொடர்பிலும் நாம் மிக விரைவில் கடுமையான சட்டங்களைக் கொண்டுவரவுள்ளோம் என சுட்டிக்காட்டியுள்ளார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :