'கொவிட் 19 ஐ வெல்வோம் - நட்புறவைப் பரப்புவோம்' எனும் தொனிப்பொருளில் நோர்வூட் பிரதேசசபை - சமர்ஹில் வட்டாரத்திற்குற்பட்ட பெருந்தோட்ட தொழிலாளர்கள் 1500 பேருக்கு முகக்கவசங்கள்,உடல் வெப்ப அளவீடு மானி வழங்கும் முதல் கட்ட பணி நேற்று லெதண்டி தோட்டத்தில் ஆரம்பமாகியது
முத்துகிருஷ்ணன் நினைவுப்பேரவையின் வேண்டுகோளுக்கிணங்க அறம் அமைப்பின் ஏற்பாட்டில் இலங்கை சீனா ஊடகவியலாளர் ஒன்றியத்தின் பிரதான அனுசரணையிலும், சமாதானம், அபிவிருத்திக்கான சீனா நட்புறவு அறக்கட்டளை யின் இணை அனுசரணையில் லெதண்டி, கார்பெக்ஸ், மால்புறோ, புரொடக், காசல்றி, கிளவட்டன், ஒஸ்போன், மிட்போட், நோட்டன், மற்றும் டங்கெல்ட் தோட்ட தொழிலாளர்கள் 1500 பேருக்கான முகக்கவசங்கள், பாதுகாப்பு உபகரணங்களும் கையளிக்கப்பட்டது.
பிரதேசசபை உறுப்பினரும் முத்துகிருஸ்ணன் நினைவுப்பேரவையின் தலைவருமான ராமச்சந்திரனின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் இலங்கை சீன ஊடகவியாளர் ஒன்றியத்தின் பிரதான ஒருங்கிணைப்பாளர் திரு.ஷாமர ரண்மண்டல, அறம் கல்விச்சமூக அமைப்பின் உறுப்பினர்கள், லெதண்டி கிராம உத்தியோகஸ்தர்,நோர்வூட் சமுர்த்தி வங்கி உதவி முகாமையாளர்,ஒஸ்போன், டங்கெல்ட் தோட்ட வைத்திய அதிகாரிகள், லெதண்டி தோட்ட வெளிக்கள உத்தியோகஸ்தர் , உட்பட லெதண்டி தோட்ட பொது மக்களும் கலந்து கொண்டனர்

0 comments :
Post a Comment