மியண்டாட் பிரீமியர் லீக் கிரிக்கட் சுற்றுப்போட்டியின் ஆரம்ப நிகழ்வுகள் இன்று !



ஐ.எல்.எம். நாஸீம், ஹுதா உமர், எம்.என்.எம். அப்ராஸ்-

30 வருடமாக இயங்கிவரும் சாய்ந்தமருது மியண்டாட் விளையாட்டு கழக ஏற்பாட்டில் நடைபெறவுள்ள எப்.எஸ்.கே. மியண்டாட் பிரீமியர் லீக் கிரிக்கட் சுற்றுப்போட்டியின் ஆரம்ப நிகழ்வுகள் இன்று மாலை தேசிய இளைஞர் சேவைகள் மன்ற சாய்ந்தமருது பயிற்சி நிலையத்தில் கழக தலைவர் ஏ. பாயிஸ் தலைமையில் நடைபெற்றது.

மாளிகா யுனைடெட், சாந்தம் சலஞ்சர்ஸ், மருதூர் வாரியர்ஸ், பொலி லயன்ஸ் ஆகிய நான்கு அணிகள் மோதவுள்ள இந்த எப்.எஸ்.கே. மியண்டாட் பிரீமியர் லீக் கிரிக்கட் சுற்றுப்போட்டியின் கழக உரிமையாளர்கள் இந்நிகழ்வில் கழக சீருடைகளை அறிமுகம் செய்து வைத்ததுடன், வெற்றி கிண்ணங்களும், பரிசில்களும், லீக் சுற்றுத்தொடரின் கொடியும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

மேலும் இந்நிகழ்வில் சாய்ந்தமருது மியண்டாட் விளையாட்டு கழக லீக் சுற்றுத்தொடர் தலைவர் எஸ்.எம்.அமீர், தவிசாளர் எம்.ஜே.எம். காலித் அடங்கிய முக்கிய நிர்வாகிகள், விளையாட்டு வீரர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :