திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோரல
திருகோணமலை மாவட்டத்தில் எந்தவெரு சூழ் நிலையிலும் எந்த அனர்த்தத்தினையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோரல தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இன்று (2) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்:
தற்போது கிழக்கு மாகாணத்தில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது,திருகோணமலை மாவட்டத்தினை பொறுத்த வரையில் பதினொரு பிரதேச செயலாளர்களையும்,அறிவுறுத்தி உள்ளோம் . மாவட்டத்தில் எல்லா உதவிகளுக்கும் தயாராக உள்ளோம்,மேலும் இம்மாவட்டத்தின் கரையோர பிரதேசங்களான கிண்ணியா மூதூர் மற்றும் புல்மோட்டை பகுதிகளிலுள்ள மக்களை அவதானமாக இருக்குமாறு கேட்டுள்ளோம் என்றார்.

0 comments :
Post a Comment