மூன்றாவது தடைவையாகவும் தெ.கி.ப.இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அறபு மொழி பீடத்தின் பீடாதிபதியாக கலாநிதி மஸாஹிர் தெரிவு.



சலீம் றமீஸ், எம்.வை.அமீர்-
லங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அறபு மொழி பீடத்தின் பீடாதிபதியாக மூன்றாவது தடைவையும் கலாநிதி எஸ்.எம்.எம். மஸாஹிர் தெரிவு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜீம் தலைமையில் (23) இடம்பெற்ற பீடாதிபதியை தெரிவு செய்வதற்கான விஷேட பீட சபைக் கூட்டத்திலேயே இவர் மூன்றாவது தடவையாகவும் அடுத்த மூன்றாண்டு; காலத்திற்கான பீடத்தின் பீடாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.

இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அறபு அறபு மொழிப்பீட வரலாற்றில் ஒருவர் மூன்றாவது முறையும் பீடாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளமை இதுவே முதன் முறையாகும்.

கலாநிதி மஸாஹிர் அவர்கள் கடந்த ஆறு ஆண்டுகளாக பீடாதிபதியாக இருந்து கொண்டு பீடத்தின் அதி துரித வளச்சிக்கு மிகக் காத்திரமான பல பங்களிப்புகளை வழங்கியதோடு, மிக அண்மையில் இஸ்லாமிய கற்கைகள் துறையில் முதுதத்துவமாணி மற்றும் கலாநிதிப் பட்டங்களை ஆரம்பிக்க முழு மூச்சாக செயல்பட்டுள்ளார்.

அக்குறணையைச் சேர்ந்த மர்ஹூம்களான செய்யித் முஹம்மத், ஸபா உம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வாரன இவர் ஜாமிஆ நளீமியாவின் பட்டதாரியுமாவார். இவர் விஷேட கலைமாணி மற்றும் முதுதத்துவமாணிப் பட்டங்களை பேராதனை பல்கலைக் கழகத்திலும் கலாநிதிப் பட்டத்தினை மலேசியா நாட்டின் மலாயா பல்கலைக்கழகத்திலும் பெற்றுக் கொண்டவராவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :