டயகம மேற்கு 04 ஆம் பிரிவில் 190 பேருக்கு பி.சி.ஆர் இரண்டு லயன் முடக்கம்


நோட்டன் பிரிட்ஜ் எம்.கிருஸ்ணா-

ரே குடும்பத்தை சேர்ந்த 11 பேருக்கு தொற்று ஏற்பட்டதையடுத்து டயகம மேற்கு 04 ஆம் பிரிவில் இரண்டு லயன் குடியிருப்பு முடக்கப்பட்டு 190 பேருக்கு பி.சி.ஆர் மேற்கொண்டதாக லிந்துலை பொது சுகாதார வைத்திய அதிகாரி ஜகத் அபேகுனவர்தன தெரிவித்தர்

கடந்த 11 ஆம் திகதி கொழும்பிலிருந்து டயகம மேற்கு நான்காம் பிரிவில் வீடொன்றில் இடம் பெற்ற நிகழ்வொன்றிற்கு வந்த பூசகர் ஒருவருக்கு தொற்று உறுதியானதையடுத்து அந்த பகுதியிலுள்ள 50 பேர் வரை சுயதனிமைப்படுத்தப்பட்டு 14 ஆம் திகதி பி.சி.ஆர் மேற்கொண்டதில் ஒரே குடும்பத்தில் 11 பேருக்கு தொற்று உறூதியானது.

இந் நிலையில் 23/12/2020 குறித்த தோட்டத்தின் இரண்டு லயன் குடியிருப்பு பகுதிகள் சுயதனிமை பிரதேசமாக அறிவித்து முடக்கப்பட்டு 190 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அதன் மாதிரி நுவரெலியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :