கொரோனாவுக்கேற்ப வாழக்கற்றல்!


வி.ரி.சகாதேவராஜா-

கொரோனாவுக்கேற்ப வாழக்கற்றல் என்ற தலைப்பு சற்று மயக்கத்தை தரக்கூடும்.கொரோனவோடு வாழுதல் கொரோனாவுக்கேற்ப வாழுதல் எனும் இரு எண்ணக்கருக்கள் உள்ளன. இவற்றில் இரண்டாவது எண்ணகருவைத்தான் கல்விப்புலத்தினர் விதந்துரைப்பர்.

கல்விப்புலத்தில் பொதுவாக நான்கு தூண்கள்(4pillers) பற்றி அடிக்கடி பேசப்படுவதுண்டு. அந்தத்தூண்களிலொன்றாக ஒன்றாகவாழக்கற்றல் (learning together)என்ற ஒரு எண்ணக்கரு உண்டு. அந்தக்கற்றல் தற்போதைய சமகால பிரபஞ்சத்தில் அவசியம் தேவைப்படும் ஒன்றாக திகழ்கிறது.

ஆம், உலகின் சகலபாகங்களிலும் வியாபித்திருக்கின்ற கொரோனா வைரஸ் தீநுண்மி இன்று எம்மைவிட்டு விலகுவதாக இல்லை. அது நிரந்தரமாக எம்முடன் தொடர்ச்சியாக பயணிக்கப்போகின்றது: எனவே அதற்கேற்ப நாம் வாழப்பழகிக்கொள்ளவேண்டும் ,அதாவது வாழ்க்கைமுறையை மாற்றிக்கொள்ளவேண்டும் என்று ஆரம்பத்தில் ஒரு விஞ்ஞானி கூறினார். அதனைச்சிலர் விமர்சனம் செய்தனர்.

எனினும் அதுதான் இன்று நிஜமாகிவருகிறதோ என எண்ணத்தோன்றுகிறது. எனவே கல்வியியலாளர்கள் அன்றுவகுத்த நான்கு தூண்களில் ஒன்றை இன்று முக்கியமாக கடைப்பிடிக்கவேண்டியுள்ளது.

தெரிந்தோ தெரியாலோ தடிமன் காய்ச்சல் போன்று கொரோனாவும் எம்முடன் தொடர்ந்து பயணிக்கப்போகின்றது என்ற செய்தியை அத்தீநுண்மி சொல்லாமல்சொல்கிறது.

சூறாவளி சுனாமி பெருவெள்ளம் போன்றவற்றுக்கு எவ்வாறு இந்தோனேசியா யப்பான் போன்ற நாடுகள் தமது வாழ்க்கைக்கோலத்தை மாற்றிக்கொண்டு பயணிக்கிறதோ, அவ்வாறு நாமும் கொரோனாவுக்கேற்ப வாழ்க்கைமுறையை மாற்றிக்கொண்டு பயணிக்கவேண்டியதன்அவசியத்தை எடுத்தியம்பிக்கொண்டிருக்கிறது.

கொரோனா என்றால் ,முழுநாட்டையும் மூடுவது ,பரீட்சைகளை நிறுத்துவது ,கற்றலை போக்குவரத்தை முற்றாக நிறுத்துவது ,என்பதை விட அதற்கு மாற்று உபாயங்களைக்கையாண்டு வாழமுற்படவேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. அதற்காக புத்திஜீவிகள், கல்வியியலாளர்கள் சிந்திக்கவேண்டிய காலகட்டம் வந்துள்ளது.

தொற்றுள்ள பிரதேசத்தை மட்டும் முடக்குவது இலத்திரனியல் உபகரணகண்காணிப்பின் துணையுடன் சுகாதாரவிதிமுறைகளுக்கமைவாக ,பரீட்சைகளை நடாத்துதல் சமுகஇடைவெளியைப்பேணி கூட்டங்களை நடாத்துதல் உரியபாதுகாப்பு நடைமுறைகளுடன் போக்குவரத்தை நடாத்துதல் போன்ற உபாயங்களைக் கையாளுவதுபோல் புதிய யுக்திகளை வகுத்து அதன்படி ஒழுகுதல்வேண்டும். நிலவுக்கு அஞ்சி பரதேசம் போவதா? என்பதையிட்டு சிந்திக்கவேண்டும்.

இல்லாவிட்டால் உலகஅரங்கிலிருந்து அல்லது வாழ்க்கையிலிருந்து ஓரங்கட்டப்படுவோம். எனவே அதற்கேற்ப சகலதுறையினரும்இணைந்து புதிய புதிய உபாயங்களைவகுத்து வாழவேண்டும்.

மிகவும் மோசமாகப்பாதிக்கப்பட்ட அமெரிக்கா, பிரேசில், இந்தியா போன்ற நாடுகளில் என்ன நடக்கவில்லை? புதியபுதிய அணுகுமுறைகளைக்கையாண்டு பயணிக்கிறதுதானே.

எனவே நாமும் இன்றைய அவசர இயந்திரவாழ்க்கைமுறையியலை விடுத்து அந்தக்கால ஆனால் புதிய வாழ்க்கைக்கோலத்திற்கு மாறவேண்டும் என்ற செய்தியை கண்ணுக்குத் தெரியாத தீநுண்மி வந்து சொல்கிறது. அதாவது இயற்கையோடு வாழுங்கள் என்று கூறுகிறது.

கல்விஉளவியலில் அறிஞர் பியாஜேயின் வகிபாகம் ஈண்டுகவனிக்கத்தக்கது. பிள்ளை சூழலுக்கு எவ்வாறு பொருத்தப்பாடு காணவேண்டும் என்பதை இரு எண்ணக்கருக்கள் மூலம் விளக்குகிறார்.
சமகால கொரோனா சூழலுக்கு இதுபொருந்துமென கருதி இங்கு பதிவிடுகிறேன்.

அந்த எண்ணக்கருக்களாவன 1.தன்னமைவாக்கம் (accommodation)2.தன்மயமாக்கல்(assimilation)
இவையிரண்டும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள் போன்றவை.

ஒன்று சூழலை தம்வயப்படுத்துதல் மற்றது சூழலுக்கேற்ப மாறுதல் என்பதாகும். இவையிரண்டும் ஒருகுழந்தை சூழலுக்கு பொருத்தப்பாடு காணும் மார்க்கங்கள் என்பதை மறந்துவிடக்கூடாது.

தன்மயமாக்கல என்பது குழந்தைகள் தாம் ஆக்கிய திரளமைப்புமூலம் சூழலை விளங்கிக்கொள்ளமுற்படுதலை குறிக்கும். சிலவேளை தமது திரளமைப்பிற்கு பொ ருந்தாத அனுபவங்களை சூழலில் எதிர்கொள்ளக்கூடும்.அப்போது அக்குழந்தை தமது திரளமைப்பை திருத்திக்கொள்வதன்மூலம் அல்லது புதிய அனுபவங்களை இணைத்துக்கொள்வதன்மூலம் அச்சூழலுக்குப் பொருத்தப்பாடடையும்.இதனை தன்னமைவாக்கல் என்பர்.

எனவே இன்றைய கொரோனா சூழலில் புதிய புதிய அனுபவங்களை நாம் எதிர்கொள்ளவேண்டிநேரிடுகிறது. அதற்கேற்ப நாம் வாழப்பழகிக்கொள்ளுதலை தன்னமைவாக்கல் எண்ணக்கருமூலம் பெற்றுக்கொள்ளலாம்.
அதனையே தற்போது இலங்கையர் மட்டுமல்ல உலகமக்களே செய்யவேண்டும். உலகநாடுகள் கொரோனாவுக்கேற்ப மாறிவருகின்றன. நாட்டையும் சமுகத்தையும் நடைமுறைகளில் மாற்றிவருகின்றனர்.இங்கு அந்த நான்குதூண்கள் பற்றி சற்று சுருக்கமாகப்பார்ப்போம்.

வாழ்நாள் முழுவதும் கல்வி என்பது நான்கு தூண்களை அடிப்படையாகக் கொண்டது:

1.தெரிந்துகொள்ளக் கற்றல்(learning to know)
2.செய்யக் கற்றுக்கொள்ளல்.(learning to do)
3.ஒன்றாக வாழக் கற்றுக்கொள்ளல்.(learning together)
4.இருக்கக் கற்றுக்கொள்ளல்.(learning to be)

1.போதுமான பரந்த வகைகளை இணைப்பதன் மூலம் அறிய கற்றுக்கொள்வது! குறைந்த எண்ணிக்கையிலான பாடங்களில் ஆழமாக வேலை செய்வதற்கான வாய்ப்பைக் கொண்ட அறிவு. இது வாழ்நாள் முழுவதும் கல்வி வழங்கும் வாய்ப்புகளிலிருந்து பயனடையக் கற்றுக் கொள்வதைக் கற்றுக்கொள்வதையும் குறிக்கிறது.

2.ஒரு தொழில் திறனை மட்டுமல்லாமல் இன்னும் பரந்த அளவில் பல சூழ்நிலைகளைச் சமாளிப்பதற்கும் அணிகளில் பணியாற்றுவதற்கும் உள்ள திறனைப் பெறுவதற்காக செய்ய கற்றுக்கொள்வது. உள்ளூர் அல்லது தேசிய சூழலின் விளைவாக அல்லது முறைசாரா படிப்புகள் மாற்று ஆய்வு மற்றும் வேலைகளை உள்ளடக்கிய முறைசாரா இளைஞர்களின் பல்வேறு சமூக மற்றும் பணி அனுபவங்களின் சூழலில் செய்யக் கற்றுக்கொள்வது என்பதும் இதன் பொருள்.

3.கற்றல் ஒன்றாக வாழ மற்ற மக்கள் பற்றிய புரிதல் மற்றும் இணைச்சார்புகளைப் பற்றிய போற்றத் உருவாக்கியதன் மூலம் நோக்கியா - இணைந்த திட்டப்பணிகள் வெளியே சுமந்துஇ பன்மைத்துவம்இ பரஸ்பர புரிதல் மற்றும் சமாதான மதிப்புகள் மரியாதை ஒரு ஆவி சொன்னால் மோதல்கள் நிர்வகிக்க கற்று.

4.ஒருவரின் ஆளுமையை வளர்த்துக் கொள்வதுடன்இ இன்னும் அதிக சுயாட்சி தீர்ப்பு மற்றும் தனிப்பட்ட பொறுப்புடன் செயல்பட முடியும். அந்த வகையில் கல்வி என்பது ஒரு நபரின் திறனின் எந்த அம்சத்தையும் புறக்கணிக்கக்கூடாது: நினைவகம் பகுத்தறிவு அழகியல் உணர்வு உடல் திறன்கள் மற்றும் தகவல் தொடர்பு திறன்.

வாழக்கைநீடித்த முறையான கல்வி முறைகள் பிற வகை கற்றல்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் அறிவைப் பெறுவதை வலியுறுத்துகின்றன; ஆனால் கல்வியை இன்னும் உள்ளடக்கிய முறையில் கருத்தரிக்க இப்போது முக்கியம். அத்தகைய பார்வை உள்ளடக்கங்கள் மற்றும் முறைகள் தொடர்பாக எதிர்கால கல்வி சீர்திருத்தங்களையும் கொள்கையையும் தெரிவிக்கவும் வழிகாட்டவும் வேண்டும்.

யுனெஸ்கோவின் கல்வியின் ஐந்து தூண்கள்

21 ஆம் நூற்றாண்டிற்கு உண்மையான பொருத்தமான ஒருங்கிணைந்த மற்றும் மிகவும் பொருத்தமான கற்றல் வாய்ப்புகளை வழங்கக்கூடிய கல்விச் சூழல்களை நாம் எவ்வாறு உருவாக்க முடியும்?

யுனெஸ்கோவின் நிலையான அபிவிருத்தி முன்முயற்சி (2012) தொடர்ச்சியான வாழ்நாள் முழுவதும் கற்றலுக்கான ஒரு கருத்தியல் கட்டமைப்பை வழங்கியது. இந்த மாதிரி பின்வரும் ஐந்து தூண்களில் கற்றலை ஏற்பாடு செய்கிறது :

அறியக் கற்றல் - இந்த உலகில் செயல்படத் தேவையான திறன்கள் மற்றும் அறிவின் வளர்ச்சி எழுத்தறிவு எண் விமர்சன சிந்தனை மற்றும் பொது அறிவை முறையாகப் பெறுதல்.
செய்ய கற்றல் - தொழில்முறை வெற்றியுடன் இணைக்கப்பட்ட பயன்பாட்டு திறன்களைப் பெறுதல்.

ஒன்றாக வாழ கற்றுக்கொள்வது - சமூக திறன்கள் மற்றும் பிறருக்கு மரியாதை மற்றும் அக்கறை போன்ற மதிப்புகளின் வளர்ச்சி மற்றும் கலாச்சார பன்முகத்தன்மையைப் பாராட்டுதல்.
வாழக் க்கு கற்றல் - ஒரு நபரின் மனம் உடல் மற்றும் ஆவிக்கு பங்களிக்கும் கற்றல். படைப்பாற்றல் மற்றும் தனிப்பட்ட கண்டுபிடிப்பு வாசிப்பு இணையம் மற்றும் விளையாட்டு மற்றும் கலை போன்ற நடவடிக்கைகள் மூலம் பெறப்பட்ட திறன்கள் ஆகியவை அடங்கும்.

தன்னையும் சமூகத்தையும் மாற்றியமைக்கக் கற்றல் - தனிநபர்களும் குழுக்களும் அறிவைப் பெறும்போதுஇ திறன்களை வளர்த்துக் கொள்ளும்போது கற்றலின் விளைவாக புதிய மதிப்புகளைப் பெறும்போது அவை நிறுவனங்கள் சமூகங்கள் மற்றும் சமூகங்களில் நீடித்த மாற்றத்தை உருவாக்குவதற்கான கருவிகள் மற்றும் மனநிலைகளைக் கொண்டுள்ளன.

சமுகமாற்றத்திற்கான முக்கிய கருவி கல்வி என்பதை மறுக்கமுடியாது. எனவே அந்தக்கல்விதான் இன்றைய நெருக்கடிமிகுந்த கொரோனாச்சூழலை எதிர்கொள்ளக்கூடிய வாழக்க்கைமுறைமையை வடிவமைக்கவேண்டும். மக்களுக்கு வழிகாட்டவேண்டும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :