நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று காரணமாக அரபுக் கல்லூரி மாணவர்களுக்கு மறு அறிவித்தல் வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய கொரோனா தொற்றிலிருந்து மாணவர்களை பாதுகாக்க குறித்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி, கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை ஆகிய பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட அரபுக் கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டு மாணவர்கள் பாதுகாப்பான முறையில் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment