நுவரெலியா மாவட்டத்திலிருந்து இம்முறை 5 தமிழ் வேட்பாளர்கள் பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர். நுவரெலியா மாவட்டத்தில் 5 ஆசனங்களை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி கைபற்றியுள்ளதுடன், ஐக்கிய மக்கள் சக்தி 3 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. அந்தவகையில் பொதுஜன பெரமுன கட்சியில் விருப்பு வாக்குகளை பெற்று வெற்றி பெற்றவர்கள்.
ஜீவன் தொண்டமான் 109155 ( இ.தொ.கா)
சி.பி.ரட்நாயக்க 70871
எஸ்.பி.திஸாநாயக்க 66045
மருதபாண்டி ரமேஸ்வரன் 57902 (இ.தொ.கா)
நிமல் பியதிஸ்ஸ 51225
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் விருப்பு வாக்குகளை பெற்று வெற்றி பெற்றவர்கள்.
பழனி திகாம்பரம் 83392
வேலுசாமி இராதாகிருஸ்ணன் 72167
மயில்வாகனம் உதயகுமார் 68119
இவர்கள் மூவரும் தமிழ் முற்போக்கு கூட்டணி உறுப்பினர்கள்.
நுவரெலியா, மஸ்கெலியா, கொத்மலை, வலப்பனை, ஹங்குராங்கெத்த ஆகிய ஐந்து தொகுதிகளை கொண்ட நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க மற்றும் முன்னாள் பிரதியமைச்சர் வடிவேல் புத்திரசிகாமணி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.பியதாஸ ஆகியோர் தோல்வியடைந்துள்ளனர். இதேவேளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் போட்டியிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுப்பையா சதாசிவம் இதே கட்சி சார்பில் போட்டியிட்ட முன்னாள் மத்திய மாகாணசபை உறுப்பினர்களான ஏ.பி. சக்திவேல் கனகபதி கணகராஜ், அருளானந்தம் பிலிப்குமார் ஆகியோருடன் சுழல் பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரனின் சகோதரரான முத்தையா பிரபாகரன் ஆகியோரும் தோல்வியடைந்தனர். இதேவேளை சுயேட்சை குழு ஒன்றின் சார்பில் போட்டியிட்ட மலையக மக்கள் முன்னணியின் பிரதி செயலாளர் நாயகம் அனுஷா சந்திரசேகரன் தோல்வியடைந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment