“பொன்னாடைகள் வேண்டாம்; சமூக சேவை சிறப்பாக அமைய துஆ செய்யுங்கள்” – இப்தார் நிகழ்வில் கலாநிதி முபாறக்



எம்.வை.அமீர்-
மூக சேவையை பாராட்டி வழங்கப்படும் கௌரவங்களையும் புகழ்ச்சிகளையும் விட, சமூக முன்னேற்றத்திற்காக அனைவரும் துஆ செய்வதே முக்கியம் என சாய்ந்தமருதின் சமூக செயற்பாட்டாளர் கலாநிதி எம்.எஸ்.எம். முபாறக் ஹாஜியார் தெரிவித்தார்.

சிலோன் மீடியா போரத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு, அதன் தலைவர் கலாநிதி றியாத் ஏ. மஜீத் தலைமையில் 2026 மார்ச் 16 ஆம் திகதி சாய்ந்தமருது சீபிரீஸ் உணவக கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய கலாநிதி எம்.எஸ்.எம். முபாறக் ஹாஜியார், தமக்கு வழங்கப்படும் கௌரவங்களை விட சமூக சேவையையே முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

தமக்கு பொன்னாடைகள் அணிவித்து கௌரவிப்பதை விட சமூக நலப் பணிகள் வெற்றிகரமாக நடைபெற அனைவரும் துஆ செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்ட அவர், “நான் அல்லாஹ்வின் திருப்தியைப் பெறும் நோக்கத்திலேயே சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறேன். எனவே எனக்குப் பாராட்டுகளோ கௌரவங்களோ தேவையில்லை. சமூகத்திற்காக நாம் மேற்கொள்ளும் பணிகள் மேலும் சிறப்பாக அமைய அனைவரும் துஆ செய்ய வேண்டும்” எனக் குறிப்பிட்டார்.

சமூகத்தில் வாழும் ஏழை எளிய மக்களின் பிரச்சினைகளை நேரில் சென்று அறிந்து, அவற்றுக்கு தீர்வு காணும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். குறிப்பாக பைத்துஸ் ஸக்காத் நிதியின் ஊடாக பல்வேறு குடும்பங்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும், அவர்களது வாழ்வாதார சிக்கல்களை நேரடியாகக் கேட்டு தீர்வு காணும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

மேலும் சமூக முன்னேற்றத்திற்காக ஊடகவியலாளர்கள் முக்கிய பங்காற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். சமூகத்தில் காணப்படும் பிரச்சினைகள், குறைகள் மற்றும் தேவைகளை வெளிக்கொண்டு வந்து அவற்றுக்கான தீர்வுகளை உருவாக்குவதில் ஊடகங்களின் ஒற்றுமை அவசியம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் முன்னேற்றம் பெறுவதற்கான வாய்ப்புகளை உருவாக்குவது சமூகத்தின் பொறுப்பாகும் என்றும் அவர் குறிப்பிட்டார். குறிப்பாக குர்ஆன் வாசிப்பு உள்ளிட்ட மத மற்றும் கல்வி சார்ந்த நிகழ்ச்சிகள் மூலம் இளம் தலைமுறையை ஊக்குவிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கலாநிதி எம்.எஸ்.எம். முபாறக் ஹாஜியார் குறித்து சிறப்பு உரையினை சிலோன் மீடியா போரத்தின் பொருளாளர் நூருல் ஹுதா உமர் நிகழ்த்தினார்.

அம்பாறை மாவட்டத்தின் பல ஊடக அமைப்புகளின் பிரதிநிதிகளான எஸ்.எம். அறூஸ், எம். சஹாப்தீன், அஸ்லம் மௌலானா, ஏ.டி. சத்தார், யூ.கே. காலிதீன், ஏ.எல்.எம். ஷினாஸ், ஷிஹான் பாறூக், எஸ். அஷ்ரஃப்கான் உள்ளிட்டோரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

அதேபோல் சிலோன் மீடியா போரத்தின் செயலாளர் ஏ.எஸ்.எம். முஜாஹித், பிரதித் தலைவர் எம்.வை. அமீர், பிரதி செயலாளர் எம்.எம். ஜபீர் மற்றும் உறுப்பினர்களும் நிகழ்வில் பங்கேற்றனர்.

சாய்ந்தமருதில் இயங்கும் முக்கியமான மூன்று நிறுவனங்களுக்கு தலைமை தாங்கி சமூக சேவைகளில் முன்னிலை வகித்து வருவதுடன், தனது 50வது வயதில் கால்பதித்துள்ள கலாநிதி எம்.எஸ்.எம். முபாறக் ஹாஜியாருக்கு (Inspiring and Role-Modeling Leadership) எனும் தொனிப்பொருளில் சிலோன் மீடியா போரத்தின் ஊடகவியலாளர்கள் ஒன்றிணைந்து சிறப்பு பாராட்டும் வாழ்த்துகளும் தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் இப்தார் சிறப்பு பயானையும் துஆவையும் அஷ்-ஷெய்க் மௌலவி ஐ.எல்.எம். ரஃபி நிகழ்த்தினார். நிகழ்வை சிலோன் மீடியா போரத்தின் உயர்பீட உறுப்பினர் எம்.ஐ.எம். றிம்ஸான் தொகுத்து வழங்கினார்.





















 















இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :