சம்மாந்துறை மக்கள் தங்களின் முக்கிய பிரச்சினைகளை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனிபாவிடம் தெரிவிப்பதற்காக அவரது அலைபேசிக்கு பலமுறை அழைப்பை ஏற்படுத்தியும் அவர், அந்த அழைப்பை ஏற்கவில்லை என்று பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
அண்மையில் ஏற்பட்ட டித்வா வெள்ளப் பெருக்கில் பாதிக்கப்பட்ட எங்களின் தகவல்களை கிராம சேவகர்கள் சரியாக வழங்காமையினால் அரசினால் வழங்கப்பட்ட பணம் எங்களுக்கு கிடைக்காமல் போய்விட்டது. அதனால் அவர்கள் மீது வைத்த நம்பிக்கையை நாங்கள் இழந்து விட்டோம். இதனாலேயே பிரதேச செயலாளர் ஹனிபாவை தொடர்புகொள்ள நாங்கள் அழைப்பை ஏற்படுத்தினோம். அவரும் அவ்வாறே இருக்கின்றார் என்று அப்பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
மேலும், எங்களின் பிரச்சினைகளையும், கிராம சேவகர் மற்றும் சமூர்த்தி உத்தியோகத்தர்களினால் ஏற்படும் அநீதி பற்றிய விடயங்களை தெரிவிப்பதற்காகவே நாங்கள் அழைப்பை ஏற்படுத்துகிறோம். மாறாக அவருடன் பொழுது போக்குக்காகவோ, அல்லது விளையாட்டுக்காகவோ அழைப்பை ஏற்படுத்துவதில்லை என்றும் அம்மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இதுதொடர்பில், குறித்த பிரதேச செயலாளர் ஹனிபாவை தொடர்புகொள்ள முயற்சி செய்தும் அதற்கும் அவர் பதிலளிக்கவில்லை. எனவே, ஒரு பொறுப்பு வாய்ந்த பதவியிலிருக்கும் பிரதேச செயலாளர் என்பவர் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். இல்லையெனில் மக்களின் விசனத்தையும், எதிர்ப்பையும் எதிர்காலத்தில் எதிர்கொள்ள வேண்டிவரும் என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.

0 comments :
Post a Comment