அம்பாறை மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக அனுபமா மங்கள விக்ரமாராச்சி அவர்கள் இன்று (12) காலை 09.21 மணியளவில் தனது கடமைகளை அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்றுக் கொண்டார். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வு சிறப்பாகவும் மரியாதையுடனும் இடம்பெற்றது.
கண்டி மத்துகமவைச் சேர்ந்த அனுபமா மங்கள விக்ரமாராச்சி அவர்கள், இலங்கை நிர்வாக சேவையின் (Sri Lanka Administrative Service) விசேட தர அதிகாரியாகத் திகழ்கிறார். நிர்வாகத் துறையில் நீண்ட கால அனுபவம் பெற்றவராகவும், பல முக்கிய நிர்வாகப் பொறுப்புகளைச் சிறப்பாக வகித்தவராகவும் அவர் அறியப்படுகிறார்.
இவர் தனது நிர்வாக சேவைக் காலத்தில் கல்முனை, மகாஒயா, உகண, பதியத்தலாவ மற்றும் திகன ஆகிய பிரதேச செயலகங்களில் பிரதேச செயலாளராக பணியாற்றியுள்ளார். மேலும், அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள மோட்டார் வாகன திணைக்களத்தின் ஆணையாளராகவும் பணியாற்றிய அனுபவம் அவருக்கு உள்ளது.
அத்துடன், சமீப காலமாக அவர் கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் மேலதிக ஆணையாளர் நாயகமாக பணியாற்றி வந்தார். அந்தப் பொறுப்பில் இருந்து அம்பாறை மாவட்டத்தின் அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பதவியேற்பு நிகழ்வில் அம்பாறை மாவட்டத்தின் மேலதிக அரசாங்க அதிபர் எஸ். ஜெகராஜன், மாவட்டத்தின் பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலகத்தின் பதவிநிலை உத்தியோகத்தர்கள், மதகுருமார்கள் மற்றும் பல்வேறு அரச அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு புதிய அரசாங்க அதிபருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
அம்பாறை மாவட்டத்தின் நிர்வாகச் செயல்பாடுகளை முன்னேற்றும் வகையில் மக்கள் நலனை மையமாகக் கொண்டு தனது கடமைகளை திறம்பட நிறைவேற்றுவதாக புதிய அரசாங்க அதிபர் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

0 comments :
Post a Comment