திருகோணமலை மாவட்டத்தில் தேர்தலுக்கான வாக்கு பெட்டி விநியோகம்


ஹஸ்பர் ஏ ஹலீம்-
திருகோணமலை மாவட்டத்தில் தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகள் வாக்களிப்பு நிலையங்களுக்கு இன்று (04) காலை 8.00 தொடக்கம் தி- விபுலானந்தர் கல்லூரியிலிருந்து
சுகாதார நடை முறைகளை பின் பற்றியவாறு அனுப்பி வைக்கப்பட்டது.
திருகோணமலை மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் மாவட்ட செயலாளருமான ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன அவர்களின் மேற்பார்வையின் கீழ் வாக்கு பெட்டி விநியோக நடவடிக்கைகள் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இடம் பெற்றது.
மொத்தமாக 307 வாக்களிப்பு நிலையங்களுக்கான வாக்கு பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 44 வாக்கு எண்ணும் நிலையங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அவற்றுள் 09 நிலையங்கள் அஞ்சல் வாக்கெண்ணும் நிலையங்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.5000 க்கும் மேற்பட்ட அரச அதிகாரிகளும் ஒரு வாக்களிப்பு நிலையத்துக்கு இரு பொலிஸாரும் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் மேலும் தெரிவித்தார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :