அம்பாரையில் மூன்று ஆசனங்களைப் பெற்றுக்கொள்ளும் தேசிய காங்கிரஸ்-அடித்துக் கூறும் உதுமாலெப்பை

திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் தேசிய காங்கிரஸ் மூன்று ஆசனங்களைப் பெற்று சாதனை படைக்கும் என்று அட்டாளைச்சேனையில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் தேசிய காங்கிரசின் காரியாலயம் திறப்பும் பொதுக்கூட்டமும் நிகழ்வில் உரை நிகழ்த்திய டொக்டர் உதுமாலெப்பை தெரிவித்தார்.

அவர் மேலும் அங்கு பேசுகையில்...

நடைபெறவுள்ள பாராளுமன்றத்தேர்தலில் தேசிய காங்கிரஸின் கொள்கையினை ஏற்றுக்கொண்ட அம்பாரை மாவட்ட மக்கள் சார சாரையாக எங்கள் தேசிய தலைவர் அதாஉல்லாவின் கரத்தைப் பலப்படுத்த கட்சியில் சேர்ந்து கொண்டே இருக்கிறார்கள்.

எனவே இம்முறை அம்பாரை மாவட்டத்தில் பெரும் சாதனை படைத்து தேசிய காங்கிரஸ் மூன்று ஆசனங்களைப் பெற்று சாதனை படைக்கும் நீங்களும் இணைந்து கொள்ளுங்கள் என்று அழைப்பு விடுத்து தனதுரையை முடித்துக்கொண்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -