சாய்ந்தமருதில் தேசிய காங்கிரஸ் தேர்தல் பிரச்சார கூட்டம்.


சாய்ந்தமருது - மாளிகைக்காடு மீனவர் சமூகத்தின் ஏற்பாட்டில்
2020 பொதுத் தேர்தல் தேசிய காங்கிரஸ் சார்பான திகாமடுள்ள மாவட்ட வேட்பாளர்,
சட்டம் ஒழுங்கு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் அவர்களை ஆதரித்து தேசிய காங்கிரஸ் தேர்தல் பிரச்சார கூட்டம் நடைபெற்றது.
கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம்.ஐ.ஏ.அஸீஸ் அவர்களின் தலைமையில் தேசிய காங்கிரஸ் தேசிய தலைவர் ஏ.எல்.எம்.அதாஉல்லாஹ் அவர்களின் பங்கேற்புடன் இந்நிகழ்வு  நடைபெற்றது.
இதன்போது, தேசிய காங்கிரஸின் மூத்த துணைத் தலைவர் டொக்டர். உதுமாலெப்பை, சட்டத்தரணி ஏ.எல்.எம்.றிபாஸ், சட்டத்தரணி கே.எல்.சமீம், தொழிலதிபர். ரீ.றஊப்,
ஆசிய அபிவிருத்தி நிறுவனத்தின் முன்னைநாள் சிரேஷ்ட நிகழ்ச்சித்திட்ட ஆலோசகரும் பிரபல உயர்தர உயிரியல் பாட ஆசிரியருமான எம்.எஸ்.றிஷாத் ஷெரீப், தென்கிழக்கு பல்கலைகழக உபவேந்தரும் முன்னாள் பாராளுமன்ற உருப்பினருமான பேராசிரியர் எஸ்.எம்.எம்.இஸ்மாயில், எஸ்.எல்.எம்.பழீல் பீ.ஏ, சட்டத்தரணி எஸ்.எம்.என்.எஸ்.அஹமது மர்ஸூம் மௌலானாஆகியோர் கலந்து கொண்டனர்.
சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்மா பள்ளிவாசல் தலைவர் அல்ஹாஜ்.வை.எம்.ஹனீபா, கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் உட்பட உலமாக்கள், பள்ளிவாசல் நிருவாகிகள், புத்திஜீவிகள், கல்விமான்கள், மீனவ மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் மற்றும் பிரமுகர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வில் பெரும்திரளான தேசிய காங்கிரஸ் செயற்பாட்டாளர்களும்,
பெருந்திரளான பொதுமக்களும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -