பொத்துவிலுக்கான பாராளுமன்ற பிரதிநிதி விடயத்தில் ஜம்மியதுல் உலமா வின் கருத்தை முழுமையாக ஏற்றுக்கொள்வேன் -வேட்பாளர் வாஷித்

பொத்துவிலுக்கான பாராளுமன்ற பிரதிநிதி விடயத்தில் ஜம்மியதுல் உலமா எடுக்கும் எந்தத் தீர்மானாலும் பூரணமாகக் கட்டுப்பட்டு நடப்பதுடன் அவர்கள் முன்வைக்கும் கோரிக்கையினை பிரதேசத்தின் நலன் கருதி, பிரதேச மக்களின் வெற்றி கருதி உடனடியாக நான் ஏற்றுக்கொள்வேன் என பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளரும் நடைபெறவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலின் திகாமடுல்ல மாவட்ட வேட்பாளருமான கலாநிதி எம்.எஸ்.அப்துல் வாஷித் தெரிவித்துள்ளார்.

நேற்று இரவு இம்போட்மிரர் ஊடக வலயமைப்பின் அரசியல் களம் எனும் முகநூல் தொலைக் காட்சி நிகழ்வொன்றில் கலந்து கொண்ட வேளை நிகழ்ச்சி தொகுப்பாளரின் கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே இக்கருத்தைத் தெரிவித்தார்.

அவர் மேலும் அங்கு தெரிவித்ததாவது..

பொத்துவில் பிரதேசம் அரசியலில் மிகவும் பின் தங்கி இருக்கும் பிரதேசமாகும். இந் நிலையில் இன்று ஊரின் அபிவிருத்தி, கல்வி, கலை, கலாச்சார விடயத்தில் ஒரு சரியான அரசியல் அதிகாரமின்மையால் தடுமாறிக்கொண்டு இருக்கிறது. எங்கள் பிரதேசத்தின் வாக்குகளைப் பெற்றுக்கொள்ள பல கட்சிகளின் வேட்பாளர்கள் கூடாரம் அடித்து தங்கி வாக்குக் கேட்கிறார்கள். ஆனால் பொத்துவில் பிரதேசம் ஒற்றுமைப்பட வேண்டும். எமக்கான அரசியல் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

ஆனால் சீசனுக்கு வந்து வாக்கு கேட்போருக்கு வாக்களிக்கும் இயந்திரங்களாக மட்டுமே நாம் இதுவரை இருந்திருக்கிறோம். இனியும் அவ்வாறு நாமிருக்க முடியாது. நம் பிரதேசத்தின் தேவைகளை நாமே உரிய இடத்தில் இருந்து கேட்டு பெற்றுக்கொள்ளும் பொருட்டு நம் பிரதேசத்தில் இருந்து ஒருவரை நாம் தெரிவு செய்து பாராளுமன்றம் அனுப்ப வேண்டும்.
இன்று அந்த சந்தர்ப்பம் மிக சுலபமாகக் கிடைத்திருக்கிறது. எனவே அதனை நாம் சிந்தித்து சரியான முறையில் செயல்படுத்தி வெற்றியினைப் பெற்று க்கொள்ள வேண்டும்.

அத்துடன் பொத்துவில் பிரதேச ஜம்மியத்துல் உலமா சபை மற்றும் பள்ளிவாயல் சம்மேளணங்கள் ஒன்று கூடி சரியான தீர்வு ஒன்றினை வழங்க உள்ளதாக அறிகிறேன். அதனை நான் சந்தோசத்துடன் வரவேற்கிறேன். பிரதேசத்தின் நலனில் அதிக அக்கரை எடுத்து ஊரின் பிரதிநிதியைப் பெற்றுக்கொள்ள முழுமனதுடன் செயலாற்ற நான் என்றுமே காத்திருக்கிறேன்.
அதற்காக ஜம்மியத்துல் உலமாசபை சரியான முடிவு ஒன்றினை எடுத்து என்னைத்தான் தேர்தல் களத்தில் இருந்து விலகுமாறு கூறினால் கூட உடனே என் பிரதேச மக்களுக்காக, பிரதேசத்தின் நன்மைக்காக விட்டுக்கொடுத்து விலகிச் செல்ல ஆயத்தமாக இருக்கிறேன்.

 ஆகவே பிரதேச மக்கள் கடந்தகால கசப்புக்களை மறந்து ஒன்று பட்டு ஒற்றுமையாக களத்தில் நின்று நமக்கான பிரதிநிதியைப் பெற்றுக்கொள்ள வருமாறு அன்பாகவும் நட்புடனும் அனைவரையும் அழைக்கின்றேன் என்றும் கேட்டுக்கொண்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -