கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் வாக்குகளுக்காக பிரதேச வாதங்களை உருவாக்க முனைவதை கண்டிக்கிறேன் - அமைப்பாளர் அறூஸ்.


எஸ்.அஷ்ரப்கான்-
கி
ழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் அவர்கள் வாக்குகளுக்காக பிரதேச வாதங்களை உருவாக்க முனைவதை கண்டிக்கிறேன் என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் அறுஸ் விசனம் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் இன்று (22) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,

கடந்த ஜனாதிபதி தேர்தலில் நீங்கள் தனியாக போட்டியிட்டதன் மூலம் எமது சமூகத்தை காட்டிக்கொடுத்து வீட்டீர்கள். இதன் மூலம் முஸ்லிம் சமூகம் இன்று நிர்க்தியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது .

மேலும் இம் முறை இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் உங்களுக்கு எந்த கட்சியும் தேர்தல் கேட்பதற்காக ஆசனம் ஒத்துக்காத நிலையில் சுயேட்சை அணியில் களம் கண்டுள்ளிர்கள். 

உங்களது சுய நல அரசியலினால்
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள எல்லை பிரதேசங்களில் உள்ள முஸ்லிம் மக்களிடம் சென்று வாக்குகளுக்காய் பிரதேச வாதத்தை துண்டுகின்றீர்கள். நகரசபை,பிரதேச சபை பெற்று தருவேன் என அங்குள்ள மக்களையும் இளைஞர்களையும் பிழையாக வழி நடாத்துகின்றீர்கள் நீங்களே தேர்தல் வெல்ல முடியாத சாத்திய நிலை உள்ள போது எவ்வாறு ? இது சாத்தியமென கேள்வியெழுப்பினார்.

இவ்வாறான மோசமான வேலைகளை செய்ய வேண்டாமென வேண்டுகிறேன். இது பற்றி மக்கள் இளைஞர்கள் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும். போலி வாக்குறுதியளிபவர்கள் யார் என்பதை மக்கள் உணரும் காலம் வெகு துரமில்லை என்றார். (எஸ்.அஷ்ரப்கான் - 0760123242)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -