ஐ.ஏ. காதிர் கான்-
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கண்டி மாவட்ட தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கான மற்றுமொரு புதிய அலுவலகம்> கம்பளை கஹட்டபிட்டியவில் நேற்று முன்;தினம் (20) திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில்;, கண்டி மாவட்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர்களான ஏ.எல்.எம். பாரிஸ் (7), மஹிந்தானந்த அளுத்கமகே (6), அனுராத ஜயரத்ன (2) ஆகியோர் உள்ளிட்ட உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள், பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீல.சு.கட்சி முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள் எனப் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.
கண்டி மாவட்டத்தில் போட்டியிடும் ஒரே ஒரு முஸ்லிம் வேட்பாளரான ஏ.எல்.எம். பாரிஸின்; இந்த வெற்றிப் பயணத்தில்> கம்பளை நகரபிதா எச்.எல்.எம். புர்கான் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
வேட்பாளர்; பாரிஸ் உரையாற்றுவதையும் படத்தில் காணலாம்.
