வைக்கோலில் தீ பரவியதால் வீட்டு உடமைகள் எரிந்து நாசம்-கல்முனையில் சம்பவம்



பாறுக் ஷிஹான்-
ல்முனைக் குடி 2ஆம் குறிச்சியில் வீடு ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தினால் குறித்த வீட்டில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமாகியுள்ளன.

கல்முனை செய்லான் வீதியில் அமைந்துள்ள ஆதம்பாவா மீராசாஹிப் என்பவரது வீட்டிலேயே இன்று (07) பிற்பகல் 3.30 மணியளவில் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது. தீ விபத்து ஏற்படும் போது வீட்டில் எவரும் இருக்கவில்லை என அருகிலிருந்தவர்கள் தெரிவித்தனர்.

புதிதாக கட்டட வேலைகள் நடைபெற்ற வீட்டில் மாடுகள் உண்பதற்காக சேகரித்து வைக்கப்பட்டிருந்த வைக்கோலில் தீ பரவியதால் வீட்டில் வைக்கப்பட்டிருந்த மரத் தளபாடங்கள் உட்பட பெறுமதியான சொத்துக்கள் எரிந்து நாசமாகியுள்ளது.

ஸ்தலத்திற்கு வருகைதந்த கல்முனை மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர் தீயை கட்டுப்படுத்தினார்கள். எனினும் தீ ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -