ஆறுமுகன் தொண்டமான் வகித்த அமைச்சுக்களைப் பொறுப்பேற்றுக்கொண்டார் மகிந்த


றைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் வகித்த, சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சரவை அமைச்சுப் பொறுப்பு, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இன்றையதினம் (01) ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ முன்னிலையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பிரதமர் பதவியில் இருக்கும் மஹிந்த ராஜபக்ஷ ஏற்கனவே நிதி, பொருளாதார மற்றும் கொள்கை திட்டமிடல், புத்தசாசனம், நகர அபிவிருத்தி, மத விவகாரங்கள், கலாசார அலுவல்கள், வீடமைப்பு, நீர் வழங்கல் அமைச்சராக பதவி வகிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -