பொத்துவில் பிரதேசத்தில் பலாத்காரமாக இடம்பெறும் காணி அளவீடுகளை உடன் நிறுத்த வேண்டும்” - ரிஷாட் பதியுதீன்

ஊடகப்பிரிவு-

பொத்துவில்லில் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் மக்களிடம் எதுவுமே தெரிவிக்காது, திடீரென அந்தப் பிரதேசத்துக்குச் சென்று, காணிகளை அளவீடு செய்வதும், அந்த இடத்தில் பாதுகாப்பு படையினரையும் கொண்டுசென்று, மக்களை பீதிக்குட்படுத்தும் தொல்பொருளியல் திணைக்களத்தின் செயற்பாடுகளையும் தான் வன்மையாகக் கண்டிப்பதாக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

“பொத்துவில் பிரதேசத்தில் காணி அளவீடு செய்வதற்கு முஷர்ரப் என்பவர் தடையாக இருப்பது நியாயமா?” என ஊடகவியலாளர் ஒருவர், நேற்று (20) முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் கேள்வி எழுப்பியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“பலாத்காரமாகவும் அடாத்தாகவும் அங்கு சென்று, மக்களின் பூர்வீகக் காணிகளை அளவீடு செய்வதனால்தான் இவ்வாறான பிரச்சினைகள் எழுகின்றன. இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது, முதலில் பிரதேசவாழ் மக்களோடு பேசவேண்டும். குறிப்பாக பிரதேச செயலாளர், கிராம சேவையாளர் வாயிலாக பள்ளி நிர்வாகம், மக்களின் பிரதிநிதிகளுக்கு இதனை தெளிவுபடுத்துவதோடு, அவர்களின் கருத்துக்களையும் உளவாங்கியிருக்க வேண்டும்.

மக்களின் பூர்வீக விடயங்கள், உறுதிப்பத்திரம் மற்றும் இதுதொடர்பிலான ஆவணங்கள் பரிசீலிக்கப்பட வேண்டும். இவ்வாறு முறையான செயற்பாடுகளை மேற்கொண்ட பின்னரே, இதுதொடர்பிலான நடவடிக்கை எடுப்பது சரியானது” என்று கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -