தேர்தலை நடத்தா விட்டால் நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுக்க வேண்டி ஏற்படும்-சுப்பையா சதாசிவம்

ஹட்டன் கே.சுந்தரலிங்கம்-

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான சுப்பையா சதாசிவம் தெரிவிப்பு.
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றினை தொடர்ந்து சர்வதேச முதலீட்டார்கள் தற்போது ஆசிய நாடுகளில் முதலீடு செய்த முதலீடுகளை மீளபெற்று வருகின்றனர்.

இது இலங்கை பொருத்த வரையிலும் பாரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும்.

ஆகவே இன்று அரசியல் வேற்றுமைகளை களைந்து நாடு என்ற ரீதியில் சிந்தித்து ஸ்தீரமான ஓர் பாராளுமன்றத்தினை உருவாக்கினால் தான் இந்த நெருக்கடி நிலையிலிருந்து விட முடியுமென முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான சுப்பையா சதாசிவம் தெரிவித்தார்.

இன்று (25) நுவரெலியாவில் நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் இங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் இன்று 5000 ரூபா கொடுப்பனவு அரசாங்த்தினால் கொடுக்கப்பட்டு வந்த போதிலும் பெரும்பாலான தோட்டத்தொழிலாளர்களுக்கு இது கிடைக்கவில்லை. காரணம் அதிகமானவர்கள் தோட்டத்தில் தொழில் பரிவதனால் இந்த கொடுப்பனவு கிடைக்கவில்லை. 

ஆனாலும் தோட்டத்தொழிலாளர்களை பொறுத்தவரையில் அதிகமானவர்கள் மிகவும் வறுமையில் தான் இருக்கிறார்கள். ஒருவர் வேலை செய்கிறார்கள் என்பதற்காக பல குடும்பங்களுக்கு இந்த கொடுப்பனவு கொடுக்காமல் இருப்பது மிகவும் வருத்தத்திற்குரியது காரணம் இவர்கள் கொடுப்பனவுகள் பெற்ற குடும்பங்களை விட கஸ்ட்டமான நிலையியேலயே இருக்கிறார்கள்.எனவே இது தொடர்பாக நான் பிரதமரிடம் விளக்கமாக எடுத்து கூறியுள்ளேன்.அனைத்து தொழிலாளர்களுக்கும் இந்த கொடுப்பனவினை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளேன் அவர் அமைச்சரையவில் பேசி நிச்சயம் அதனை செய்வார் என்று நம்புகிறேன்.

அதே நேரம் இன்று முதியோர் மற்றும் நோயாளர்களுக்கான கொடுப்பனவுகளை வீட்டுக்கே கொண்டு சென்று கொடுக்க வேண்;டும் என்று ஜனாதிபதியும் பிரதமரும் தெரிவித்துள்ளார்கள். ஆனால் அதிகாரிகள் அதனை கொண்டு கொடுப்பதில்லை என்று எனக்கு முறைபாடுகள் தெரிவித்தார்கள். இது குறித்து நான் மாவட்டச் செயலாளர் புஸ்பகுமாரவிடம் பேசிய போது அவர் வீட்டில் கொண்டு கொடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பாதாக தெரவித்தார.; என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -