கல்முனை மாநகர சபை முன்பள்ளியின் வித்தியாரம்ப விழா



அஸ்லம் எஸ்.மெளலானா-
ல்முனை மாநகர சபை நிர்வாகத்தின் கீழ் உள்ள மருதமுனை கே.எம்.சி. பாலர் பாடசாலையின் வித்தியாரம்ப விழா நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (06) வெகு சிறப்பாக நடைபெற்றது.

மருதமுனை பொது நூலகத்தின் நூலகர் எஸ்.எம்.ஆர். அமீனுதீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம். றாபி பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

அத்துடன் கல்முனை மாநகர சபையின் முன்னாள் உதவி ஆணையாளரும் தற்போதைய உகன பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளருமான ஏ.எஸ்.எம். அஸீம், மருதமுனை ஜம்மியதுல் உலமாவின் தலைவர் அஷ்ஷெய்க் அஹமதுல் அன்ஸார் மெளலானா, மருதமுனை ஷெய்னப் மகளிர் அரபுக் கல்லூரி அதிபர் அஷ்ஷெய்க் ஏ.எச். றிபான், மருதமுனை அந்நஹ்ழா அரபுக் கல்லூரி அதிபர் அஷ்ஷெய்க் ஏ.எச். பர்ஸான், மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரியின் பிரதி அதிபர் எம்.சி.ஏ. நஸார், ஓய்வுபெற்ற அதிபர்களான ஏ.எம்.எம். பாறுக், ஏ.ஆர்.ஏ. றசூல் ஆகியோர் கெளரவ அதிதிகளாக கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது இப்பாடசாலையில் புதிய கல்வி ஆண்டுக்காக அனுமதி பெற்ற மாணவர்கள் வரவேற்கப்பட்டு, அவர்களுக்கான கல்விச் செயற்பாடுகள் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :