குடாகமயில் கடைகள் உடைப்பு - பெஞ்ஜோ மோப்பநாய் திருடனின் வீட்டை அடையாளம் காட்டியதுநோட்டன் பிரிட்ஜ் எம்.கிருஸ்ணா-

குடாகம பகுதியில் சில்லறை வர்த்தக நிலையங்களை உடைத்து களவாடிய சந்தேகநபரின் வீட்டை பெஞ்ஜோ மோப்ப நாயின் உதயுடன் அடையாளம் கண்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்

அட்டன் நுவரெலியா பிரதான வீதியின் குடாகம சந்தியிலுள்ள இரண்டு சில்லறை வர்த்தக நிலையங்களே 25/05 காலை 05 மணியளவில் உடைத்து களவாடப்பட்டுள்ளது

வர்த்தக நிலைய உரிமையாளர்களின் முறைப்பாடுக்கமைய விசாரணையை ஆரம்பித்த பொலிஸார், குறித்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சீ.சீ.டீவி காணொளியின் உதவியுடனும் நுவரெலியாவிலிருந்து அழைத்து வரப்பட்ட பெஞ்ஜோ மோப்பநாயின் உதவியுடனும் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடையவனை தேடும் நடவடிக்கையின் ஈடுட்டனர்

இந் நிலையில் அட்டன் பொலிஸ் பிரிவு மல்லியப்பு தோட்டத்திலுள்ள வீட்டொன்றினுள் நுளைந்த மோப்பநாய் சந்தேக நபர் அணிந்திருந்த ஜெக்கட்டை அடையாளம் காட்டியது, எனினும் சந்தேக நபர் தலைமறைவாகியுள்ள நிலையில் களவாடப்பட்ட பொருட்களையும் சந்தேக நபரையும் தேடும் நடவடிக்கையில் அட்டன் மற்றும் திம்புள்ள பத்தனை பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -