பெருநாள் ஷொப்பிங்-கவிதை-


பெருநாள் ஷொப்பிங்
+++++++++++++++++
Mohamed Nizous

அபாயா வாங்க ரெடியாகும் ராத்தா
அபாயம் வந்து சேரலாம் கூத்தில்
ஆ பயம் இல்லை என்று போறியா
ஆப்பு அடிக்க காத்திருக்கு மீடியா

சட்டை வாங்கப் போகின்ற மம்மி
அ-சட்டையாக போகுமிடத்தில் தும்மி
கெட்ட பெயர் எடுக்க வேணாம் சும்மா
கிளம்ப வேணாம் சொப்பிங் போக உம்மா.

ஒரு செய்தி தெரியுமா பாத்தும்மா
ஊடகம் காத்திருக்கான் பார்த்து உம்மா
...ரு செய்தி கிழிப்பான் காட்டி
கெட்ட அரண பழிப்பான் கூட்டி.

பெரு நாளை கொண்டாட முன்பு
கொரோனாவில் மாட்டினால் வம்பு
ஒரு நாள் உடுப்பதற்காய் ஷொப்பிங் போக
ஒரேயடியாய் நோய் வரலாம் மனம் நோக

ஆதங் காக்கா கேளுங்க கொஞ்சம்
அவதிப் பட்டு நெருங்குதல் நஞ்சாம்
போதுங்க கிப்ஸ் தேடி அலைந்ததும்
போன இடத்தில் வியர்வையில் நலைந்ததும்

உடுப்பு வாங்கிக் கொடுக்காட்டி நோனா
அடுப்படியில் கராட்டி அடிப்பா வீணா
எடுப்போம் உடுப்பென்று போனா
தடுப்பு முகாமில் சிக்கலாம் நானா.

சிந்தித்து வாழுவோம் காக்கா
சீரழியும் நிலை வராமல் காக்க
இந்த முறை எளிமையான முறையில்
ஈத் பெரு நாள் எடுப்போம் நிறைவாய்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -