இளைஞர் சடலமாக மீட்கப் பட்டு நல்லடக்கம்


எம்.ஏ.முகமட்-
கிண்ணியா பொலிஸ் பிரிவிலுள்ள சோலை வெட்டுவான் பகுதியில் கடலில் காணாமல் போன இளைஞர் நேற்று இரவு கடற்படையினரால் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவரது உடல் நேற்று நள்ளிரவு நல்லடக்கம் செய்யப் பட்டதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் கிண்ணியா-03 மதீனா நகர் பகுதியைச் சேர்ந்த யுனைதீன் - பாஹீம் (வயது -21) இளைஞராவர்.

கிண்ணியா- சோலை வெட்டுவான் பகுதியில் மூவர் மணல் ஏற்றிக் கொண்டிருந்த போது அவ் வழியாக இருவர் மோட்டர் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.

குறித்த இருவரும் பொலிஸார் என நினைத்து, இவ் இளைஞன் கடல் வழியாக தப்பிக்க முயன்ற போது இவர் காணாமல் போயிருந்தார்.

இவரது சடலம் இக் கடலில் சேற்றில் புதையுண்ட நிலையிலையே மீட்கப்பட்டதாகவும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -