நலன்புரி மற்றும் ஏனைய சேவைகளை ஒருங்கிணைப்புச்செய்யவும் இலகுபடுத்தும் நோக்கில் உதவியாக ஒருங்கிணைப்பாளர்களை நியமனம் செய்துள்ளது.




எப்.முபாரக் -

கொவிட் 19 நிலை காரணமாக பொது நிர்வாக அமைச்சு சகல மாவட்டங்களிலும் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் நலன்புரி மற்றும் ஏனைய சேவைகளை ஒருங்கிணைப்புச்செய்யவும் இலகுபடுத்தும் நோக்கில் உதவியாக ஒருங்கிணைப்பாளர்களை நியமனம் செய்துள்ளது.

அதன்படி திருகோணமலை மாவட்டத்திற்கு வீடமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் எஸ்.டி.கொடிகார ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நேற்று (15)அவர் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தனவை மாவட்ட செயலகத்தில் சந்தித்ததுடன் அரசாங்கத்தினால் வழங்கப்படும் கொடுப்பனவுகள் அத்தியவசிய சேவைகள் உட்பட பல விடயங்களை இதன்போது கலந்துரையாடினர்.

இந்நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.அருந்தவராஜா,மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி)எம்.ஏ.அனஸ்,மாவட்ட உதவ அரசாங்க அதிபர் என்.பிரதீபன் உட்பட அதிகாரிகள் சிலரும் கலந்து கொண்டனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -