ஏ.எல்.எம்.ஷினாஸ்-
அம்பாறை மாவட்டத்தில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று (16.04.2020) காலை தளர்த்தப்பட்டதை அடுத்து அத்தியவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக பொதுமக்கள் நகரின் வியாபார தளங்கள் மற்றும் பொதுச்சந்தைகளுக்கு வருகை தந்தனர்.
பாண்டிருப்பு, மருதமுனை, பெரியநீலாவணை, போண்ற பிரதேசங்களில் வீதியோரங்களில் மரக்கரி மற்றும் அத்தியவசிய பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன. வியாபார நிலையங்களுக்கு வரும் பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைகள் பற்றி பொதுச் சுகாதார பரிசோதகர்கள், பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் ஒண்றினைந்து விழிப்புணர்வு அறிவுறுத்தல்களை பொதுமக்களுக்கு வழங்கினார்கள்.
வியாபார நிலையங்களில் விற்பனை செய்யப்படும் பொருட்களின் விலைகளை காட்சிப்படுத்த மாநகர சபை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவல்கள் அதிகார சபை என்பன நடவடிக்கை எடுத்திருந்தது. அதிகளவிலான பொதுமக்கள் இன்றைய தினம் பொருட்களை கொள்வனவு செய்ததையும் காணக்கூடியதாக இருந்தது.
