இன்றைய கால கட்டத்தில் கொரோனா எனும் கண்ணுக்கு தெரியாத வைரஸினால் நாங்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே போகாத நிலையில் இருக்கிறோம், காரணம் நாங்களும் நமது சமூகமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதனால், ஆனால் இந்த கால கட்டத்தில் அன்றாடம் கூலித் தொழில் செய்து தமது குடும்பத்தை கொண்டு செல்லும் பல ஏழை மக்கள் மிகவும் கஷ்டத்தை எதிர் நோக்கியுள்ளனர், மேலும் அன்றாட வருமானம் இல்லாமல் அவர்களால் தினமும் மூன்று வேலை உணவை கூட உண்ண முடியாத நிலையில் காணப்படுகிறார்கள்.
சிலருக்கு சில மக்கள் உதவி செய்கிறார்கள், ஆனாலும் சிலரால் கண்டு கொள்ளாத சில குடும்பங்களும் எம்மை சுற்றி இருக்கத்தான் செய்கிறார்கள், வெட்கத்தின் மூலம் வெளியில் உதவியை கேட்காத ஏழ்மையிலும் கௌரவத்துடன் வாழும் சிலர் அம்பாரை மாவட்டத்தில் சில முஸ்லீம் மற்றும் தமிழ் பகுதிகளைச் சேர்ந்த (சுமார் 148) குடும்பங்களுக்கு (சுமார் 2000 ரூபாய்) பெறுமதியை கொண்ட உலர் உணவு பொதியை வழங்க எண்ணியுள்ளோம்.
வருடா வருடம் ரமலான் மாதத்தில் சில மக்களுக்கு இறைவனின் உதவியுடன் உதவி செய்ய சந்தர்ப்பம் அமையும் ஆனால் இப்போது ரமழானுக்கு முன்னதாகவே சில மக்களுக்கு கட்டாயம் உதவி செய்ய வேண்டிய சூழ் நிலை உருவாகியுள்ளது, மேலும் நம்மோடு அன்றாடம் ஒன்றோடொன்றாக கலந்து ஒட்டி உறவாடும் சகோதர தமிழ் மக்களையும் சேர்த்து அதன் காரணமாக எங்கள் உறவுகளின் உதவியை எதிர் நோக்கி உள்ளோம்.
வெளிநாடுகளில் வாழும் எமது உறவுகள் உங்களால் முடிந்த அளவு உதவியை செய்ய முன்வாருங்கள்.
148 குடும்பங்களுங்கு உலர் உணவு பொதி கொடுக்க
(சுமார் 296000 ரூபாய்) தேவைப்படுகிறது, உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள், உங்கள் சிறிய உதவி மூலம் சில குடும்பங்களில் ஏழை குழந்தைகள் மூன்று நேரம் உணவு உண்ண வழி வகுக்கும்.
தர்மம் இறைவனின் கோபத்தை தணிக்கும், அது போல உங்கள் பாவங்கள் உங்கள் தர்மத்தின் மூலம் அழிக்கப்படும், தர்மம் செய்து விட்டு நீங்கள் கேட்கும் துஆ உடனே இறைவனால் ஏற்று கொள்ளப்படும், மற்றும் மண்ணறையிலும் தர்மம் உங்களுக்கு நன்மைகளாக வந்து சேரும், ரமலான் நெருங்கும் இந்த நேரத்தில் உங்கள் உதவி கரத்தை நீட்டுங்கள், நீங்கள் பணமாகவோ அல்லது பொருளாகவோ தர விரும்பினால் கீழ் காணும் தொலைபேசினுடாக தொடர்பு கொண்டு விபரங்களை கேட்டறிந்து கொல்லுங்கள்.........!!!!!!!
தொலைபேசி இலக்கம் ⬇️⬇️+94 77 47 37 067
Islamic Helping Hand.
