பூனானை தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் இருந்து 222 வெளியேறியுள்ளனர்


பூனானை தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் இருந்து மேலும் 222 நபர்கள் மூன்று வார காலம் தனிமைப்படுத்தப்பட்ட செயல்முறைக்குப் பிறகு தனிமைப்படுத்தப்பட்ட சான்றிதழ்களுடன் நேற்றுக் காலை (17) ஆம் திகதி தங்களது வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர்.
இராணுவத்தினால் வழங்கப்பட்ட போக்குவரத்து வசதிகளுடன் கொழும்பு மற்றும் கடவத்த ஆகிய பிரதேசங்களை நோக்கி புறப்பட்ட குறித்த குழுவினருக்கு படையினரால் சிற்றுண்டி உணவுகள், குடி நீர் மற்றும் மதிய உணவுப் பொதிகள் விஷேடமாக குழந்தைகள் மற்றும் சிறுவர்களை கருத்திற்கொண்டு வழங்கப்பட்டுள்ளன.

குறித்த தனிமைப்படுத்தல் நிலையத்தின் கட்டளை அதிகாரி, அதிகாரிகள் மற்றும் ஏனைய படையினர் உட்பட பலர், வெற்றிகரமாக இந்த தனிமைப்படுத்தல் காலத்தினை நிறைவு செய்து புறப்பட்ட அவர்களை வழியனுப்பி வைத்தனர்.

இலங்கை இராணுவம்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -