காரைதீவு நிருபர் சகா-
1897ஆம் ஆண்டு ஒல்லாந்தர் காலத்தில் இலங்கையில் கொண்டுவரப்பட்ட
தொற்றுநோய்த்தடுப்புச் சட்டமே இன்றும் அமுலில் உள்ளது. மக்கள்
சட்டதிட்டங்களை மதித்துச் செயற்படவேண்டும். சட்டத்தை மதியாவிட்டால்
கொரோனா மனிதகுலத்தை மிதிக்கும்.
இவ்வாறு சம்மாந்துறை பொலிஸ் நிலைய பிரதி பொலீஸ்பொறுப்பதிகாரி
சீனிமுகம்மது அமீர் காரைதீவு வர்த்தகர்கள் வியாபாரிகள் மத்தியில்
உரையாற்றுகையில் தெரிவித்தார்.
கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் ஊரடங்கு வேளைகளில் ஊரடங்கு
நீக்கப்பட்டவேளைகளில் வியாபாரிகள் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும் மற்றும்
விற்பனைக்கான அவசரகால அனுமதி வழங்கல் தொடர்பான கூட்டம் நேற்று
காரைதீவில் நடைபெற்றது.
காரைதீவு பிரதேசசபையின் ஏற்பாட்டில் காரைதீவு விபுலாநந்தா கலாசார
மண்டபத்தில் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில் நடைபெற்ற
இந்நிகழ்வில் கடற்படையின் காரைதீவுமுகாம் பொறுப்பதிகாரி டபிள்யு.பியசிறி
மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
அங்கு பொலீஸ்அதிகாரி அமீர் மேலும் உரையாற்றுகையில்
இதுவரைகாலமும் மாளிகைக்காடு மீன்சந்தைக்கு மன்னார் திருகோணமலை புத்தளம்
போன்ற பகுதிகளிலிருந்து கொண்டுவரப்பட்ட மீன்கள் தற்போது
தடைசெய்யப்பட்டுள்ளது. காலையில் 3மணி தொடக்கம் 6மணிவரை அங்கு பொலிஸ்
பாதுகாவல் போடப்பட்டுள்ளது.
அம்பாறை பிரதிபொலிஸ் மாஅதிபரின் சுற்றுநிருபத்திற்கமைவாக
ஊரடங்குவேளைகளில் காலையில் 7-10மணிவரை மீன் வியாபாரமும் 9-12மணிவரை
மரக்கறி வியாபாரமும் பேக்கரிவியாபாரம் பி.பகல் 3-6மணிவரையும்
நடாத்தப்படவேண்டும். அதனையே இங்கு தவிசாளர் சொன்னார்.
சட்டத்தை மீறினால் வியாபார லைசன்ஸ் ரத்துச்செய்யப்படும்.
இருவாரகால தனிமைப்படுத்தலை உதாசீனம் செய்தால் இருவருடம்
சிறையிலிருக்கவேண்டிவரும். என்றார்.
தவிசாளர் கி.ஜெயசிறில் உரையாற்றுகையில்
உலகத்தை நிலைகுலையச்செய்துள்ள கொரோனாவைரஸ் பாரிய வல்லரசுகளையே
ஆட்டங்காணச்செய்துள்ளது.எனவே நாம் அதற்கு துர்சு.
வருமுன் காப்பது மட்டுமே சிறந்தவழி. அதற்கு மக்கள்தான் பிரதானகாரணம்.
அரசாங்கம் எப்படித்தான் சட்டதிட்டங்களை அமுல்படுத்தினாலும் மக்களாகிய
நாம் இதன் பாரதூரத்தை அறிந்து அதன்படி நடக்காவிட்டால் அழியவேண்டிவரும்.
ஊரடங்கோ இல்லையோ சகல கடைகளும் அடைக்கப்படவேண்டும். நாம் வீட்டுக்குவீடு
நடமாடும் சேவையில் சகல பொருட்களையும் கொண்டுவர ஏற்பாடுசெய்துள்ளோம். எனவே
வெளியே வராமல் எம்மையும் சமுகத்தையும் நாட்டையும் பாதுகாக்க உதவுவோம்
என்றார்.
வியாபாரிளுக்கு பாஸ் வழங்கப்பட்டது.