வீட்டில் விளையாடு பாப்பா.
வெளியே போகாதே பாப்பா.
கூடி விளையாடாதே பாப்பா
கொரோனா வந்துவிடும் பாப்பா.
காலை எழுந்து கொஞ்சம் படிப்பு
கதைப் புத்தகங்களோடு பிடிப்பு
மாலை சகோதரரோடு விளையாட்டு
மனதை பழக்கப்படுத்திவிடு பாப்பா .
கை கால் முகம் கழுவு பாப்பா.
கண்ட பொருள் தொடாதே பாப்பா.
மெய் நனையக் குளிக்கணும் பாப்பா
நடைமுறையே உயிருக்கு தாழ்ப்பாள்.
சுற்றித் திரிதல் வேண்டாம் பாப்பா.
சூழவும் கிருமியுண்டு பாப்பா .
தொற்றிக் கொண்டு விட்டால் பாப்பா.
தூரவே தள்ளி வைப்பார் பாப்பா .
தும்மல் , இருமல் கண்டவிடத்து
தூரநின்று பேசவேண்டும் பாப்பா.
எம்மில் சிலருக்கும் கொரோனா
இருந்து விட நியாயமுண்டு பாப்பா.
இறைவன் நமக்குத் துணை பாப்பா.
இருகை ஏந்திக்கேளு பாப்பா .
குறைகள் நோயுமற்ற வாழ்வை
நிறைவாய் தரச்சொல்லியே கேட்பாய்.