மக்களுக்காக 24 மணிநேர ஜனாதிபதி செயலக சேவை!


ற்போதைய நெருக்கடி நிலைமையைக் கருத்திற் கொண்டு - முறைப்பாடுகளைப் பொறுப்பேற்பதை முதன்மை நோக்கமாகக் கொண்டே எனது மக்கள் தொடர்பு பிரிவை #24_மணி நேரமும் திறந்துவைத்திருக்க நான் நடவடிக்கை எடுத்துள்ளேன்.

அரசாங்கமும் நானும் வழங்கும் உத்தரவுகளை எவரும் நடைமுறைப்படுத்த தவறினால்

மக்களுக்குச் சிரமங்களை ஏற்படுத்தும் வகையில், அரசாங்க உத்தரவுகளை மீறி எவரும் செயற்பட்டால்

அவை தொடர்பான முறைப்பாடுகளையும் விபரங்களையும் -

☎011 435 4550

☎011 435 4655

என்ற தொலைபேசி இலக்கங்களின் ஊடாகத் தெரியப்படுத்தங்கள்.

மேற்படி தொலைபேசி இலக்கங்களின் ஊடாகத் தொடர்பு கொள்ள முடியாது போனால் -

எனது செயலகத்தின் நேரடி தொலைபேசி இலக்கமான ☎011 235 4354 என்ற இலக்கத்தை தொடர்பு கொண்டு -

☎3872
☎3873
☎3874
☎3875

ஆகிய தொடர் இலக்கங்களில் ஒன்றினை அழுத்துவதன் ஊடாகவும் முறைப்பாடுகளைப் பதிவு செய்ய தொடர் முடியும்.

அதே சமயம் - எனது செயலகத்தின் மக்கள் தொடர்பகப் பணிப்பாளர் திரு. கபில குணசிங்க அவர்களின் தனிப்பட்ட ☎077 374 3718 என்ற கையடக்க கைத்தொலைபேசி இலக்கத்துடனும் தொடர்பு கொண்டு முறைப்பாடுகளை முன்வைக்க முடியும்.

அத்தோடு - கொரோனா நோய்த்தொற்றுப் பரவலுடன் தொடர்பான விடயங்களை உடன் தெரியப்படுத்துவதற்கு -

☎011 286 0003

☎011 286 0004

ஆகிய இலக்கங்களைத் தொடர்புகொள்ளுங்கள்

மேலும் ☎011 235 4354 என்ற இலக்கத்தைத் தொடர்புகொண்டு, 3355 என்ற தொடர் இலக்கத்தினை அழுத்துவதன் ஊடாகவும் மேற்படி தகவல்களைத் தெரிவிக்க முடியும்.

மக்கள் வழங்கும் தகவல்களை - அதனுடன் தொடர்பான துறைகளுக்கு உடனுக்குடன் அனுப்பி வைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

என்னால் வழங்கப்படும் பணிப்புரைகள் மற்றும் அறிவுறுத்தல்களை நடைமுறைப்படுத்தாமை தொடர்பில் முழுமையான விசாரணைகள் மேற்கொள்ளப்படும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -