யாழ்ப்பாணம் இராச்சியத்தின் அடையாளமாக உள்ள மந்திரிமனையை அமைச்சர்களான இராமலிங்கம் சந்திரசேகர் , பிமல் ரத்நாயக்க ஆகியோர் நேற்றிரவு முன்தினம் பார்வையிட்டனர்.
யாழ்ப்பாணத்தில் நேற்று முன்தினம் பெய்த கடும் மழை காரணமாக தொல்பொருள் சின்னமான மந்திரிமனையின் ஒரு பக்கம் இடிந்து விழுந்திருந்தது.
யாழில் நேற்று நடைபெற்ற விசேட கூட்டம் மற்றும் அபிவிருத்தி திட்ட ஆரம்ப நிகழ்வுகளில் பங்கேற்க வந்திருந்த அமைச்சர் பிமல் ரத்நாயக்கவுடன், சந்திரசேகர் சென்றிருந்தார்.
அங்குள்ள நிலைமைகளை ஆராய்ந்த பின்னர், அது பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டறிந்துகொண்டார். அத்துடன், துறைசார் அமைச்சரின் கவனத்துக்கு இந்த விடயம் கொண்டு வரப்பட்டுள்ளது என அமைச்சர் சந்திரசேகர் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் இராச்சியத்தின் அடையாளமாக உள்ள மந்திரிமனையை பாதுகாப்பதற்கு தேவையான அத்தனை நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனவும் அமைச்சர் உறுதியளித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment