உள்ளுராட்சி வாரத்தை முன்னிட்டு கல்முனை மாநகர சபை நிர்வாகத்தின் கீழ் உள்ள 04 பொது நூலகங்களிலும் ஒழுங்கு செய்யப்பட்ட சிறப்பு நிகழ்வுகள்
வெள்ளிக்கிழமை (19) வெற்றிகரமாக நடைபெற்றுள்ளன.
கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம். றாபியின் அறிவுறுத்தலுக்கு அமைவாக இந்நூலகங்களில் புத்தகக் கண்காட்சி, நூல் சேகரிப்பு, மரநடுகை மற்றும் சிரமதான, நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கல்முனை பொது நூலக நிகழ்வுகள் நூலகர் ஹரீஷா எம்.ஏ. காதர் தலைமையில் இடம்பெற்றன. இங்கு நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் கல்முனை இராமகிருஷ்ண மகா வித்தியாலய மாணவர்கள் கலந்து கொண்டனர்.
மருதமுனை பொது நூலக நிகழ்வுகள் நூலகர் எஸ்.ஆர்.எம். அமீனுதீன் தலைமையில் இடம்பெற்றன. இங்கு நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
சாய்ந்தமருது பொது நூலக நிகழ்வுகள் நூலகர் ஏ.எம். முஸ்தாக் தலைமையில் நடைபெற்றன. இங்கு இடம்பெற்ற புத்தகக் கண்காட்சியில் சாய்ந்தமருது மல்ஹருஸ் ஸம்ஸ் மகா வித்தியாலய மாணவர்கள் கலந்து கொண்டனர்.
நற்பிட்டிமுனை பொது நூலக நிகழ்வுகள் நூலகர் ஏ.எச். தஸ்தீக் தலைமையில் இடம்பெற்றன. இங்கு நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் நற்பிட்டிமுனை அல்-அக்ஸா மகா வித்தியாலய மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இந்நூலகங்களில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த நூல் சேகரிப்பு நிகழ்வில் அவ்வப்பிரதேச ஊர்ப் பிரமுகர்கள் எழுத்தாளர்கள், வாசகர்கள், , நூலகப் பணியாளர்கள் மற்றும் பொது மக்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு, நூல்களை அன்பளிப்பு செய்திருந்தனர்.
இந்நிகழ்வுகளை திட்டமிட்டவாறு சிறப்பாக ஒழுங்கு செய்து, வெற்றிகரமாக நடாத்தி முடித்த நூலகர்கள் மற்றும் நூலகப் பணியாளர்களுக்கும் மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம். றாபி நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துள்ளார்.










0 comments :
Post a Comment