காரைதீவு பெரிய பாலம் புனர்நிர்மாண அங்குரார்ப்பண நிகழ்வில் அமைச்சர் பிமல்!



வி.ரி.சகாதேவராஜா-
காரைதீவு - அம்பாறை பிரதான வீதியில் உள்ள 90 வருடங்கள் பழமை வாய்ந்த பெரிய பாலத்தை புனர்நிர்மாணம் செய்வதற்கு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து சேவைகள் அமைச்சரும் பாராளுமன்ற சபை முதல்வருமான அமைச்சர் விமல் ரத்நாயக்க அடிக்கல் நாட்டி அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.
இந் நிகழ்வு நேற்று (20) சனிக்கிழமை மாலை காரைதீவில் நடைபெற்றது.

நிகழ்வில் கெளரவ அதிதியாக கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் வசந்தபியதிஸ்ஸ விசேட அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர் முத்து ரத்துவத்தை, பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுல ஆகியோர் கலந்து கொண்டனர்.

அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேயவிக்கிரம, காரைதீவு பிரதேச செயலாளர் எந்திரி ஜி.அருணன், வீதி அபிவிருத்தி அதிகாரசபை மாகாண பணிப்பாளர் எம்.அலியார், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொறியியலாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகள்,தேசிய மக்கள் சபையின் பிரதேச சபை உறுப்பினர்கள், தேசிய மக்கள் சக்தியின் பிரதேச ஒருங்கிணைப்பாளர்கள், செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்

மக்களின் நீண்டகால கோரிக்கைக்கு அமைய இப் பெரிய பாலம் சுமார் 247மில்லியன் நிதி உதவி உடன் புனர்நிர்மானம் செய்யப்படவுள்ளது.










இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :