மரத்தில் தொங்கிய நிலையில் ஒரு பெண்ணின் சடலம் மீட்பு!



க.கிஷாந்தன்-
ன்று அதிகாலை மரத்தில் தொங்கிய நிலையில் ஒரு பெண்ணின் சடலம் மீட்கப்பட்டதாக வட்டவளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சந்தன கமகே தெரிவித்தார்.
வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குயில்வத்த பகுதியைச் சேர்ந்த கண்ணன் மணிராணி என்ற 62 வயதுடைய பெண்ணின் சடலம் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
தங்களது தோட்டத்தில் உள்ள ஒரு மரத்தில் குறித்த பெண் தனது சேலையில் தொங்கிய நிலையில் இறந்துவிட்டதாக தோட்டத் தொழிலாளர்கள் வட்டவளை பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில், வட்டவளை பொலிஸார் இந்த சடலத்தைக் மீட்டனர்.
இது தற்கொலையா அல்லது கொலையா என்பதைத் தீர்மானிக்க, வட்டவளை பொலிஸார், ஹட்டன் பொலிஸ் பிரிவு புலனாய்வுக் குழுவின் உதவியுடன், பல பிரிவுகள் வழியாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :