இந்த நிகழ்வில் இலங்கை பிரதமர் ஹரிணி அமாசூரிய, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அமைச்சர் பேராசிரியர் ஹினிதும் சௌவி, அரச இலக்கியக் குழுத் தலைவர் கமல் பெரேரா, கலாசார அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் கே. எஸ். தில்ஹானி, இலங்கை கலைக்கழகத் தலைவர் கீர்த்தி வெலிசாகே, கலாசார அமைச்சின் செயலாளர் பிரின்ஸ் சேனாதீர், புத்தகப் பூங்காவின் ஸ்தாபகர் புரவலர் ஹாஷிம் உமர், கலாசார திணைக்கள தமிழ்ப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் எஸ். நேசன் உள்ளிட்ட அரச மற்றும் இலக்கிய துறையைச் சேர்ந்த பலரும் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர்.
விழாவின் சிறப்புப் பகுதியிலாக, சாஹித்திய ரத்னா விருதுகள் கலாநிதி சோமாதன பாலசூரிய மற்றும் பிரேமினி அமாசிங்க ஆகியோருக்கு வழங்கப்பட்டன. மேலும், பல்வேறு இலக்கியத் துறைகளில் சிறந்து விளங்கியவர்களும் தெரிவு செய்யப்பட்டு விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இவ்விழா இலங்கையின் இலக்கிய மரபை கௌரவிக்கும் வகையில், எதிர்கால எழுத்தாளர்களுக்கு ஊக்கமளிக்கும் நிகழ்வாகப் பாராட்டப்பட்டது

0 comments :
Post a Comment