அமரர் சந்தானம் அருள்சாமி பிறந்த நாள் - நினைவு நாள்- சமூக முன்னேற்றத்திற்கான அவரது அர்ப்பணிப்பு என்றும் நினைவில்



க.கிஷாந்தன்-
லையக சமூகத்தினதும் பொதுமக்களினதும் முன்னேற்றத்திற்காக தன்னலமின்றி பாடுபட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், மத்திய மாகாண கல்வி அமைச்சரும், சிரேஷ்ட தொழிற்சங்கவாதியுமான அமரர். சந்தானம் அருள்சாமி அவர்களின் இன்று (21) 66வது பிறந்த நாளாகும்.

அவரின் வாழ்நாளில் கல்வி, சமூக நீதி, சமத்துவம், மனிதநேயம், மற்றும் இளைஞர்களின் முன்னேற்றம் என்பனவற்றை நோக்கமாகக் கொண்டு செயலாற்றிய தொண்டுகள் எமது சமூக வரலாற்றில் மறக்க முடியாத இடத்தைப் பெற்றுள்ளன.
மலையக கல்வி வளர்ச்சிக்கும் மக்களின் நலனுக்காக அவர் எடுத்த முயற்சிகள், எதிர்கால தலைமுறையினருக்கு என்றும் வழிகாட்டியாக திகழும்.

அவரது சேவைகள் இன்று மட்டுமல்லாது நாளைய தலைமுறையினராலும் நினைவுகூரப்பட வேண்டியவை. சமூக முன்னேற்றத்திற்காக அவர் கடைப்பிடித்த கொள்கைகள், எம்மை உற்சாகப்படுத்தும் சக்தியாக விளங்குகின்றன.
இந்நாளில் அவரின் மறக்க முடியாத நினைவுகளை எம்மோர் அனைவரும் மரியாதையுடன் போற்றுகிறோம்.
அவரின் வாழ்க்கை, சிந்தனை மற்றும் தொண்டு பணிகள் எப்போதும் எமது சமூகத்திற்கும் வருங்கால தலைமுறைக்கும் ஒளியூட்டும் வழிகாட்டியாக நிலையாகும்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :