!.ஹஜ் கோட்டாக்ளின் சக நடவடிக்கைளும் அரசாங்கத்தின் நேரடி பார்வையின் கீழ் கொண்டு வரப்பட்டால்.! அவை முஸ்லிம் சமூகத்தால் பெரிதும் வரவேற்கப்படும்.!!


If the Actions of Haj Quotas are brought under the direct vision of the government.! They are greatly welcomed by the Muslim community.
புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்சவினால் ஹஜ் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மர்ஜான் பளீழ் இம்முறை ஹஜ் கடமையினை நிறை வேற்றுவதற்காக 3500 ஹாஜிகளுக்கு வாய்ப்பளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இவ்வாறாக அதிகமாக இவ்வாண்டு ஹஜ் கடையினையினை நிறை வேற்றுவதற்காக கிடைத்துள்ள கோட்டாக்களை அரசாங்கம் தனது நேரடி கண்கானிப்பின் கீழ் கொண்டுவருவதும், எவரும் பாதிக்காத வகையில் நியாயமான தொகையினை அறவிடுவதும், அதன் மூலம் கிடைக்கும் இலாபங்கள் எல்லாவற்றையும் அரச திறைசேரிக்கு செல்லும் வகையில் பல எதிர்பார்ப்புக்கலுக்கு மத்தியில் தெரிவாகியுள்ள புதிய ஜனாத்திபதி கோட்டாபாய ராஜபக்ச நேரடி உத்தரவு பிறப்பிப்பார் என்றால் அது முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் பெரும் வரவேற்பினை பெறும் என்பதில் மாற்றுக்கருத்திருக்க வாய்ப்பில்லை.

கடந்த காலங்களில் அரசியல் வாதிகளின் சிபார்சுகளுக்கு அமைய அவர்களுடைய எடுபிடிகளுக்கு இருப்பதைந்து, ஐம்பது, நூறு என ஹஜ் கோட்டாக்கள் பகிர்ந்தளிக்கப்பட்டு புனித கடமையினை நிறைவேற்ற காத்திருக்கும் ஹாஜிகளின் வயிற்றில் அடிக்கும் செயற்பாடிட்னை உப முகவர்கள் என தங்களை அடையாளப்படுத்திக்கொண்டவர்கள் தாங்கள் நினைத்தை போல் அவர்களுடைய திள்ளுமுள்ளு விளையாட்டினை மேற்கொண்டதோடு புனித ஹஜ் கடமையினை வியாபாரமாக்கி கோடீஸ்வரர்களாகியும் உள்ளனர்..

இவ்வாறு புனித ஹஜ் கடமையினை நிறை வேற்றுவதற்காக சவுதி அரசாங்கம் இலங்கைக்கு பல சலுகைகளை வழங்கி இருந்தாலும் எமது முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் இருக்கும் அரசியல் தலைமைகளின் தேவைக்காக அவர்களுடைய அடிவருடிகளினால் ஹஜ் கடையானது வியாபாரமாக மாற்றப்பட்டுள்ள விடயத்தினை புதிய அரசாங்கம் தனது கவனத்தில் கொண்டு செயற்படுகின்றமையும், சில அதிரடி மாற்றங்களை கொண்டு வந்துள்ளமையும் உண்மையில் பாராரட்டப்பட வேண்டிய விடயமாகவே உள்ளது.

மேலும் கடந்த காலங்களில் ஹஜ் கடமையினை நிறை வேற்றியவர்களின் வயிற்றில் அடித்து கோடீஸ்வரர்களாக சமூகத்தில் தங்களை இனங்காட்டிக்கொண்ருக்கும் கயவர்களை ஜனாதியும், புதிய அரசாங்கமும் சட்டத்துக்கு முன் நிறுத்தி ஹஜ் கோட்டாக்களை விற்பனை செய்ததின் ஊடாக எவ்வாறு முஸ்லிம் சமூகத்தினை ஏமாற்றி பணம் சம்பாதித்துள்ளார்கள் போன்ற என்ற விடயத்தினை இந்த நாட்டு முஸ்லிம்களுக்கு தெளிவு படுத்த வேண்டிய முக்கியமான எதிர்கால அரசியல் தேவைப்பாட்டில் இந்த அரசாங்கம் இருப்பாதாகவும், அதனை அரசாங்கம் பக்க சார்பின்றி சாத்தித்து காட்ட வேண்டும் என்ற கருத்தில் நான் இருகின்றேன்.

ஆகவே இவ்வாறான முஸ்லிம் சமூகத்தின் அடிப்படை மார்க்க விடயங்களில் திள்ளுமுள்ளு விளையாட்டு காட்டிய கடந்த அரசியல்வாதிகளின் அடிவருடிகளும், அதற்கு காரணமானவர்களும் சட்டத்துக்கு நிறுத்தப்பட்டு அரசாங்கமானது ஹஜ் கடமையின் அனைத்து நடவடிக்கைகளையும் தனது நேரடி கண்கானிப்பின் கீழ் கொண்டு வருமாயின் அரசியல் ரீதியாக புதிய அரசாங்கத்தினை முஸ்லிம் சமூகத்தில் இருந்து அசைக்க முடியாத சக்தியாக மாற்றும் என்பது எல்லோருடைய ஒருமித்த கருத்துக்கு அப்பால் வேறொன்றும் இருக்க வாய்ப்பில்லை.

எனவே கடந்த ஜனாதிபதி தேர்தலில் இந்த நாட்டு முஸ்லிம்கள் ஜனாதிபதி கோட்டாவூக்கு வாக்களிக்காவிடாலும், எதிரே வருகின்ற பாராளுமன்றம் , மாகாண சபை தேர்தல்களில் ஆட்ச்சியிலுள்ள புதிய அரசாங்கமானது முஸ்லிம்களுடைய வாக்குகளை பெற்றுக்கொளுவதற்கு இவ்வாறான அதிரடி நடவடிக்கைகளையும், நேர்மையான செயற்பாடுகளையும் முஸ்லிம் சமூகத்துக்காக ஜனாத்திபதியின் நேரடி காண்கானிப்பின் கீழ் நிறைவேற்றுவது இன்றியமையாத ஒன்றாகும்.

அத்தோடு முஸ்லிம் அரசியல் தலமைகள் சொல்லித்தான் முஸ்லிம் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்ற கடந்தகால எழுதப்படாத வரலாறுகள் மாறி, தாங்கள் எதற்காக புதிய அரசாங்கம் விரல் நீட்டுபவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் தெளிவு கண்ட சமூகமாக இந்த நாட்டில் உள்ள ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகமும் மாற்றமடையும் என்பது எனது ஆணித்தரமான கருத்தாகும். அதற்காக இராணுவம் களத்தில் அமர்த்த்தப்படாலும் அது முஸ்லிம் சமூகத்துக்கு பயனுள்ள ஒரு விடயமகவே என்னால் பார்க்கப்படுகின்றது. இப்படிக்கு ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -