தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் புதிய தலைவராக முன்னாள் மாகாணசபை உறுப்பிணா் ரேனுகா பெரேரா ஜனாதிபதியின சிபாா்சின் பேரில் நியமிக்கப்பட்டுள்ளாா். அவா் தனது கடமைகளை தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைமைக் காரியாலயத்தில் பொறுப்பேற்றுக் கொண்டாா். இவ் வைபவத்தில் வீடமைப்பு நிர்மாணத்துறை இராஜாங்க அமைச்சா் இந்திக்க அநுரத்தவும் பிரசன்ன மாயிருந்தாா்.
இங்கு கருத்து தெரிவித்த தே.வீ.அ. தலைவா். தான் ஏற்கனவே இலங்கை போக்குவரத்து சபையில் தலைவராகவும் , மகாணசபையிலும் கடமையாற்றியதாகவும்.தற்பொழுது வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையை பிரதமா் மகிந்த ராஜபக்சவினால் தன்னிடம் ஒப்படைக்கப்பெற்றுள்ளது. இந்த அதிகார சபையின் மூலம் காடந்த காலத்தில் ஒதுக்கப்பட்ட நிதிகள் முறைகேடாக பாவிக்கப்பட்டுள்ளது. மேலதிக செலவுகள் தேவைக்கு அதிகமான ஆட்சேர்ப்பு நடைபெற்றுள்ளது. இவ் அலுவலகம் மூலம் உயரிய பயணை மக்களுக்கு சேவை செய்ய வேண்டும அதற்காக சகலரும் தன்னோடு ஒத்துழைக்குமாறும் வேண்டிக் கொண்டாா்.